Astrology: திருவாதிரை நட்சத்திரத்தில் குரு.. இந்த 4 ராசிக்கு செம லக்!
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கடகம், துலாம் ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். நிதி லாபம், குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம், வெற்றி போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடப்பலன்
ஜோதிட சாஸ்திரமானது நவக்கிரகங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதில் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு கிரகங்கள் பெயர்ச்சி அடைவது இயற்கையான ஒரு நிகழ்வாக உள்ளது. கிரகங்கள் சில ராசிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை, தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அந்த வகையில் மிக சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றான குரு திருவாதிரை நட்சத்திரத்திற்குள் சென்றுள்ளது. இது நான்கு ராசிகளுக்கும் அற்புதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குரு கிரகம் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். இது செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஜூலை 28 ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தில் இடம்பெயரும் குரு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அது இந்த நட்சத்திரத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நான்கு ராசிகளுக்கும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிக் காணலாம்.
- ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் செல்வ யோகம் கிடைக்கும். அவர்களுக்கு பல நிதி நன்மைகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவை சாதகமாக இருக்கும். வீட்டிலும் சமூகத்திலும் ஒரு நேர்மறையான சூழ்நிலை உருவாகும். உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வார்கள்.
- மிதுனம்: குருவின் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரம் அமையும். எதிர்பாராத வழிகளில் பணம் வந்து சேரும். அனைத்து சிரமங்களும் விரைந்து தீரும். அதைத் தவிர, அவர்கள் எந்த வேலை செய்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கும் அளவுக்கு ஸ்கோப் இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பயணம் செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். விடாமுயற்சி வெற்றி தரும்.
- கடகம்: குருவின் சஞ்சாரத்தால், இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். எந்த விதமான தொழிலில் முதலீடு செய்தாலும் லாபம் காண்பீர்கள். அதைத் தவிர, சிம்ம ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அவர்களுக்கு நன்மை பயக்கும் அளவுக்கு பயன் இருக்கும். ராசிக்காரர்கள் வீட்டில் சுப நிகழ்வுகளும் நடைபெறும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக ஆன்மிக பயணம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும்.
- துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு முயற்சி எடுக்கும் அத்தனை வழிகளிலும் நிதி நன்மைகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரின் கனவுகள் நனவாகும். இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நன்றாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களில் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் அதிகபட்ச லாபத்தைப் பெறுவார்கள். வீட்டிலும் வெளியேயும் ஒரு நேர்மறையான சூழ்நிலை உருவாகும். நீங்கள் கையில் எடுக்கும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)