Astrology: அடுத்த 5 மாதங்கள் இந்த 5 ராசிக்கு செம லக்.. எப்படி தெரியுமா?
2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் மீனம் ராசிகளுக்கு குரு, சுக்கிரன் சாதகமான பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த ராசிகளின் கனவுகள் நிறைவேறும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் ராசிக்காரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஜோதிடப்பலன்
ஜோதிட சாஸ்திரம் (Astrology) இன்றளவும் கணிக்க முடியாத ஒன்றாகவும், எதிர்பாராத ஒன்றாகவும் அமைந்துள்ளது. நவக்கிரகங்கள் (Navagraha Transit) அடிப்படையில் செயல்படும் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பாராத ஒன்றாகவே அமைகிறது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், பல ராசிக்காரர்கள் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் அனுபவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 5 ராசிக்காரர்கள் மட்டுமே உச்சத்தில் உள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராசிக்காரர்கள் நவக்கிரகங்களில் குரு மற்றும் சுக்கிரனின் சாதகமான கிரகப் பெயர்ச்சியால் பயனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட ராசியினர் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களில் வளர்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறையான மாற்றங்களுக்கான வாய்ப்புகளை வழங்கும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
எந்த 5 ராசிக்கு சாதகமான காலம்?
- ரிஷபம்: இந்த 2025ன் மீதமுள்ள காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் கனவுகள் மிகவும் நிலையானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். அதேசமயம் விரைவில் நனவாகக்கூடிய வாய்ப்பும் கைகூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. ராசிக்காரர்கள் அமைதியான குடும்பம், நல்ல பழக்கவழக்கங்கள் அல்லது வலுவான உறவுகளை விரும்பினாலும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி அவர்களின் இலக்குகளை நிறைவேற்ற உதவும். அதேசமயம் எல்லா விஷயங்களிலும் பொறுமையாக கையாண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
- சிம்மம்: தலைமை பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ராசியினர் தங்கள் திறமைகளை உலகிற்குக் காட்ட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பீர்கள். இதுதான் உங்களுக்கு சரியான தருணம். என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களோ, எதை உருவாக்க விரும்புகிறீர்களோ, எந்த பாதையில் செல்ல நினைக்கிறீர்களோ அதை தைரியமாகச் செய்ய வேண்டும். 2025ம் ஆண்டின் இரண்டாம் பாதியில், உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கச் செய்யும். குடும்பத்தினர் பெருமைப்படக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- துலாம்: இந்த ராசிக்காரர்கள் காதல், நட்பு மற்றும் படைப்பாற்றல் போன்றவற்றில் விருப்பம் கொண்டிருப்பார்கள். நீங்கள் நினைப்பவை அனைத்தும் இந்த காலக்கட்டத்தில் நடைபெறும். வாழ்க்கையில் புதிய வழிகள் பிறக்கும். வருமானம் ஈட்ட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் இரட்டிப்பாகும். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- தனுசு: தனுசு ராசிக்காரர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளின் வேகமும் முழு வீச்சில் இருக்கும். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், நீங்கள் பயணம் செய்ய, கற்றுக்கொள்ள அல்லது வளர புதிய வாய்ப்புகளை கிடைக்கும் என ஆராய்வீர்கள். முன்பை விட பெரிய கனவுகளைக் காணத் தொடங்கலாம். புதிதாக எங்காவது செல்ல விரும்பினால் அல்லது அற்புதமான ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்பினால், இதுவே சிறந்த நேரமாகும். தைரியமாக களமிறங்கி செயல்படுங்கள்.
- மீனம்: மீன ராசிக்காரர்கள் எப்போதும் கனவு காண்பவர்களாக இருக்கிறார்கள். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, கடைசியில் தங்கள் பார்வையை சரியென நிரூபித்து நிஜ வாழ்க்கை மந்திரமாக மாற்றுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளுடன் முன்னேற முடியும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாகும். தொடங்கும் வேலையில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
(ஜோதிட நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)