“கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்! | TV9 Tamil News

“கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!

Updated On: 

16 Apr 2026 13:18 PM

 IST

Tamilnadu Assembly Election: செந்தில் பாலாஜியை மனிதாபிமானம் இல்லாத, இரக்கமற்ற ஒரு "அரக்கன்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தத் திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்று சாடினார்.

1 / 5மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை மாநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை "அரக்கன்" என விவரித்து, அவரது அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை மாநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை "அரக்கன்" என விவரித்து, அவரது அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

2 / 5

செந்தில் பாலாஜி இதுவரை ஐந்து கட்சிகளுக்கு மாறியவர். கரூரில் மக்கள் அவரை நிராகரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்தே இப்போது கோவைக்கு வந்துள்ளார். தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தான் பிரசாரத்திற்கே செல்லாவிட்டாலும் மக்கள் தன்னை நேசிப்பதாகக் குறிப்பிட்ட அவர், செந்தில் பாலாஜி கரூரைச் சுரண்டி முடித்துவிட்டு இப்போது கோவையைச் சுரண்ட வந்துள்ளார் என்று சாடினார்.

3 / 5

கடந்த காலங்களில் திமுக தலைவர் கருணாநிதி பற்றிச் சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி எவ்வளவு தரக்குறைவாகப் பேசினார் என்பது பதிவாகியுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜி அதிமுகவில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால் இப்போது இருவரும் புனித நீராடியது போலத் தூய்மையானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள் என விமர்சித்தார்.

4 / 5

செந்தில் பாலாஜியை மனிதாபிமானம் இல்லாத, இரக்கமற்ற ஒரு "அரக்கன்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, கோவை மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இந்தியாவில் குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசுதான். சொத்து வரி, வீட்டு வரி மற்றும் மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. "கரண்டைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் இப்போது கரண்ட் பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கும்" என்று கிண்டலாகப் பேசினார்.

5 / 5

அதிமுக - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் போது, தான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். எம்.ஜி.ஆர் கூறியது போலத் தீயசக்தியான திமுகவை தமிழகத்தில் இருந்து வேரோடு அழிக்க மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Follow Us