இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.. உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் Settle! | TV9 Tamil News

இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் போதும்.. உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலம் Settle!

Updated On: 

08 Apr 2026 11:53 AM

 IST

Sukanya Samriddhi Yojana Scheme Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பெண் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் உதவும் இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்.

1 / 5பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும், அவர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடக்கூடாது, கல்வி செலவுக்கு பணம் வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக தங்களது நகைகள், வீடு உள்ளிட்ட அனைத்தும் கூட விற்பனை செய்யும் நிலைக்கு அவர்கள் செல்கிறார். 

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்க வேண்டும், அவர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடக்கூடாது, கல்வி செலவுக்கு பணம் வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக தங்களது நகைகள், வீடு உள்ளிட்ட அனைத்தும் கூட விற்பனை செய்யும் நிலைக்கு அவர்கள் செல்கிறார். 

2 / 5

ஆனால், அதற்கெல்லாம் அவசியம் இல்லை. முறையான திட்டமிடல் இருக்கும் பட்சத்தில் சிறப்பாக முதலீடு செய்து எதிர்காலத்துக்கான நிதியை உருவாக்க முடியும். அதுவும் மாதம் வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் மட்டும் போதும். திட்டத்தின் முடிவில் அது ரூ.70 லட்சமாக உயர்ந்து நிற்கும்.

3 / 5

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய சந்தை அபாயங்கள் குறித்தும், பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கங்கள் குறித்தும் கவலைப்பட தேவை இல்லை. காரணம் இந்த திட்டம் பங்சந்தை உடன் தொடர்பில் இல்லாத ஒன்று. அதாவது மிகவும் பாதுகாப்பான அம்சங்களுடன் அரசு வழங்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தான் இது.

4 / 5

பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.12,500 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை தொடர்ந்து நீங்கள் 15 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை தொடர வேண்டும். அப்போது ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். 

5 / 5

இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்யும் 15 ஆண்டுகள் அதன் பிறகு 6 ஆண்டுகள் என சேர்த்து உங்களுக்கு சுமார் ரூ.69 முதல் ரூ.70 லட்சம் வரை பணம் கிடைக்கும். பெண் குழந்தைகள் பிறந்த உடனே தொடங்க இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய காலம் 15 ஆண்டுகளாக இருந்தாலும், உங்களால் பணத்தை பெண் குழந்தை 21 வயதை அடையும் போதுதான் எடுக்க முடியும். 

Follow Us