IPL 2026: காத்திருக்கும் மோசமான சாதனை.. புறம் தள்ளுவாரா ரோஹித் சர்மா? | TV9 Tamil News

IPL 2026: காத்திருக்கும் மோசமான சாதனை.. புறம் தள்ளுவாரா ரோஹித் சர்மா?

Published: 

25 Mar 2026 22:46 PM

 IST

Rohit Sharma IPL Duck Out: முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஐபிஎல் 2026 சீசனில் விளையாடத் தயாராகிவிட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவங்களில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டார். எனவே, அவரது ரசிகர்கள் ஐபிஎல்லில் ரோஹித் சர்மா விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் பெயரில் ஒரு விரும்பத்தகாத சாதனை நிகழலாம்.

1 / 5ரோஹித் சர்மா, ஐபிஎல் 2026 தொடருக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கடைசியாக 2020-ல் கோப்பையை வென்றது. இதன் காரணமாக ரோஹித் சர்மா கோப்பையை வென்று தர வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். இந்த சீசனில், ரோஹித் ஷர்மா பேட்டிங்கை ஆக்ரோஷமாகவும், அதே சமயம் கவனமாகவும் தொடங்க வேண்டும்.

ரோஹித் சர்மா, ஐபிஎல் 2026 தொடருக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கடைசியாக 2020-ல் கோப்பையை வென்றது. இதன் காரணமாக ரோஹித் சர்மா கோப்பையை வென்று தர வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். இந்த சீசனில், ரோஹித் ஷர்மா பேட்டிங்கை ஆக்ரோஷமாகவும், அதே சமயம் கவனமாகவும் தொடங்க வேண்டும்.

2 / 5

அதன்படி, ஐபிஎல் 2026 தொடரில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த சீசனில் ரோஹித் சர்மா இரண்டு முறை டக் அவுட் ஆனால், அது ஒரு மோசமான சாதனையாக அமைந்துவிடும். கடந்த 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது ரோஹித் சர்மா சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். அதேபோல், இந்த 2026 சீசனிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

3 / 5

ஐபிஎல் 2026 தொடரில் ரோஹித் இரண்டு இன்னிங்ஸ்களில் டக் அவுட் ஆனால், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். இந்த விரும்பத்தகாத சாதனை அவர் பெயரில் பதிவு செய்யப்படும்.

4 / 5

ஐபிஎல் வரலாற்றில் இந்த மோசமான சாதனையை தற்போது ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் தன்வசம் வைத்துள்ளார். அவர் ஐபிஎல் போட்டிகளில் 19 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்தப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கூட்டாக 18 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

5 / 5

பஞ்சாப் கிங்ஸ் அணி கிளென் மேக்ஸ்வெல்லை விடுவித்ததுடன், அவரும் இந்தத் தொடரில் இருந்து விலகினார். எனவே, அவர் இனி இந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்பது தெளிவாகிறது. தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஐபிஎல் தொடரிலிருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். எனவே, இந்த சங்கடமான சாதனைப் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தை எட்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

Follow Us