Anbil Mahesh Poyyamozhi Tamil Nadu Election: இருமுறை வெற்றி வாய்ப்பு… திருவெறும்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி! | TV9 Tamil News

Anbil Mahesh Poyyamozhi Tamil Nadu Election: இருமுறை வெற்றி வாய்ப்பு… திருவெறும்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Published: 

22 Mar 2026 10:00 AM

 IST

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி மாநில செயலாளராக இணைந்து தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து வரும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இரு முறை வெற்றியை கொடுத்த திருவெறுப்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொள்வாரா.

1 / 5திமுக அமைச்சரவையில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும்,  திமுகவின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.  இவர், கடந்த 1977- ஆம் ஆண்டு டிசம்பர் 2- ஆம் தேதி  அன்பில் பொய்யாமொழி-  மாலதி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை  அன்பில் பொய்யாமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.  இவரது  தாத்தா  அன்பில் தர்மலிங்கம்  திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

திமுக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகவும், திமுகவின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர், கடந்த 1977- ஆம் ஆண்டு டிசம்பர் 2- ஆம் தேதி அன்பில் பொய்யாமொழி- மாலதி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை அன்பில் பொய்யாமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது தாத்தா அன்பில் தர்மலிங்கம் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

2 / 5

இவரது குடும்பம் அரசியல் பின்புலம் உடையதால் அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்தார்.அப்போது, அவருக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவியில் கடந்த 2014 முதல் 2019- ஆம் ஆண்டு வரை இருந்தார். இதனிடையே, கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி களம் இறக்கப்பட்டார்.

3 / 5

இந்தத் தேர்தலில் முதல் முறை வெற்றியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். அவருக்கு திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டு தொடர்ந்து வருகிறார். இதை தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2- ஆவது முறை தனது வெற்றியே நிரூபித்து எம்எல்ஏவாக தடம்பதித்தார். அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலினின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 / 5

கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் களமிறங்கிய அன்பின் மகேஷ் பொய்யாமொழி அதிமுக வேட்பாளர் டி. கலைச்செல்வனை வீழ்த்தி 46.98 சதவீத வாக்குகள் பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். பின்னர், 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் களம் இறக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிமுக வேட்பாளர் பே. குமாரை வீழ்த்தி 53.48 சதவீத வாக்குகள் பெற்று 2- முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அத்துடன் அமைச்சர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

5 / 5

அதன்படி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீண்டும் 3- ஆவது முறையாக திருவெறும்பூர் தொகுதியில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு களம் இறக்கப்படும் பட்சத்தில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியை 3- ஆவது முறையாக மீண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைப்பற்றுவார் என்று கட்சி வட்டாரத்தினர் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை பொருத்து அரசியல் களம் மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.

Follow Us
Related Stories
பங்குனி உத்திரம் 2026.. குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீக பலன்களும், விளக்கமும்..
IPL 2026: மோசமான சாதனையில் பும்ரா முதலிடம்.. ஐபிஎல் 2026ல் தவிர்ப்பாரா?
Sivakasi Constituency Election 2026: குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி சட்டமன்ற தொகுதி.. பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையை யார் நிறைவேற்றுவார்?
பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!
IPL 2026: ஐபிஎல்லில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ரன்கள்.. விரட்டி விரட்டி அடித்த விராட் கோலி..!
Sara Arjun: ட்ரெண்டிங் கதாநாயகியாக சாரா அர்ஜுன்.. துரந்தர் படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?