திமுக VS அதிமுக.. அரசியல் களம் யாருக்கு சாதகமாக இருக்கும்? | TV9 Tamil News

திமுக VS அதிமுக.. அரசியல் களம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

Updated On: 

27 Feb 2026 13:55 PM

 IST

திமுக தரப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகளே திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என யூகங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில், அரசியல் களத்தில் யார் அரியணை ஏறுவார்கள் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

1 / 6தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. முக்கியமாக அதிமுக–திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. முக்கியமாக அதிமுக–திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2 / 6

திமுக எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில், அதிமுகவும் இம்முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் உள்ளது.

3 / 6

அரசியல் வல்லுநர்களின் கணிப்புகளின்படி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

4 / 6

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், 2021 சட்டமன்றத் தேர்தலில் இருந்த அதே கூட்டணி தற்போது தொடர்கிறது; எந்தவித விரிசலும் இல்லாமல் உள்ளது. கூடுதலாக மக்கள் நீதி மையம் மற்றும் தேமுதிகவும் கைகோர்த்துள்ளன.

5 / 6

அதிமுகவிலிருந்து பிரிந்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சசிகலா தொடங்கிய புதிய கட்சி, மேலும் ஓ. பன்னீர்செல்வம் தனிப்பட்ட நிலைப்பாடு என வாக்கு வங்கி இரண்டு அல்லது மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. தற்போது ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளதால், அதிமுகவின் வாக்குகள் மேலும் சிதறும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கூட்டணி வலுவாக இருந்தாலும், வாக்கு வங்கி பலவீனமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

6 / 6

திமுக தரப்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகளே திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என யூகங்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியில், அரசியல் களத்தில் யார் அரியணை ஏறுவார்கள் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

Follow Us