Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் கனவில் பணம் வருகிறதா? அதற்கு இதுதான் அர்த்தம் தெரியுமா!!

Seeing Money in Your Dream: நம்மகிட்ட திடீரென தேவைக்கு மீறி பணம் இருப்பதுபோல், பலமுறை தூக்கத்தில் நாம் கனவு காண்டிருப்போம். அதேசமயம், நம்முடைய தேவைக்கே பணம் இல்லாதது போலக் கூட கனவு காண்டிருப்போம். அப்படி வரும் கனவுகளுக்கு பின்னால் உளவியலாகவும், ஜோதிடவியலாகவும் உள்ள அர்த்தத்தை பார்க்கலாம்.

உங்கள் கனவில் பணம் வருகிறதா? அதற்கு இதுதான் அர்த்தம் தெரியுமா!!
மாதிரி படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Oct 2025 15:18 PM IST

கனவு தூக்கத்தின் ஒரு கட்டத்தில் ஏற்படக்கூடிய ஒன்று. அதில் எண்ணம், உணர்ச்சி, உணர்வு நாம் பார்த்தவை, என பலவும் கலந்து ஒரு குறும்படம் போல் ஓடும். இது 5-20 நிமிடங்கள் வரை நீடிக்க கூடியது. கனவு எப்படி ஏற்படுகிறது. கனவிற்கான காரணம் என்ன என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆராய்ந்து அதற்கான குறிப்புகளையும் விட்டுச் சென்றுள்ளார்கள். கனவை தத்துவவியல், மனோவியலோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டு வந்த நிலையில், இப்போது மூளைக்கு செல்லும் நரம்புகள் தான் காரணம் என ஆராயப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கனவில் வரும் குறீயிடுகளை நிஜவாழ்க்கையோடு பொருத்தி நல்லதா? கெட்டதா என ஆராய்ச்சி செய்வோம். அதற்கான அர்த்தம் என்ன எனவும் அறிய முற்படுவோம். அப்படி கனவில் பணம் வந்தால் எண்ண அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.

கனவில் பணம் வந்தால் எண்ண அர்த்தம்?

பணம் நம்மிடம் இருப்பது போல கற்பனை செய்வதை விட, நம் கனவில் அதனை அதிக தடவை பார்க்கலாம். அந்த கனவில் நீங்கள் பணம் சேர்ப்பதை பார்க்கிறீர்களா அல்லது பணத்தை இழப்பது போல பார்க்கிறீர்களா என்பதே அதில் கவனிக்க வேண்டிவை. கனவுகள் பெரும்பாலும் குழப்பமான ஒன்றாக தான் இருக்கும். ஆனால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைச் சூழல் என்னவோ அதுவே கனவில் தோன்றும். எண்ண ஓட்டம், மனநிலை, சிந்தனை என இவற்றை சார்ந்தே கனவு ஏற்படும்.

ஜோதிடவியல் படி:

ஜோதிடவியல் படி, கனவில் பணம் வந்தால், இலக்கினை அடைதல், அளவற்ற செல்வத்தினை பெறுதல் என ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் அவர் அடையப் போகும் வெற்றியோடு தொடர்புடையதாகும். எடுத்துக்காட்டாக, வாழ்வில் ஏற்படும் பாசிட்டிவ் மாற்றம் அல்லது புதிய வாய்ப்பு இதன் மூலம் உங்களின் வாழ்வில் ஏற்டக்கூடிய வாழ்க்கை மாற்றம். இதனால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பொருளாதார மாற்றம். இதன் குறீயிடாக பணம் வரலாம். அதேபோல், பணத்தை இழப்பது போல கனவு வந்தால், நீங்கள் எடுக்கப்போகும் முடிவுகளோ அல்லது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாதையோ குறிக்கலாம்.

Also read: Monsoon Safety Tips: மழையில் இப்படி பைக்கை ஓட்டினால் விபத்து ஏற்படாது.. பாதுகாப்பு குறிப்புகள் இதோ..!

மேலும், ஜோதிடவியல்படி கனவில் பணம் வருவதை வியாழன் மற்றும் வெள்ளியோடு ஒப்பிட்டு செல்வம் மட்டுமல்ல வெற்றி ஏற்பட போவதையும் குறிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆக உங்களுடைய ராசி, நட்சத்திரம் கோள்களின் நிலைப்பாடு இவற்றைக் கொண்டு, கண்ட கனவு வரும்காலத்தில் நீங்கள் சந்திக்கப்போவது பிரச்சனையா அல்லது விரும்பிய இலக்கை அடைய போகிறீர்களா என்பதை கணிக்க உதவும்.

உளவியல் படி:

உளவியல் படி, கனவில் பணம் வந்தால் அது செல்வமாகவோ அல்லது பொருட் சார்ந்தோ இருக்க தேவையில்லை. அது, ஒருவருக்கு கிடைக்கும் பாராட்டு, மற்றும் அதிகரிக்கும் தன்னம்பிக்கையைக் கூட குறிக்கலாம். பணத்தை இழப்பது போல கனவு வந்தால், ஒருவரின் சுமை, பாதுகாப்பின்மை, பொருளாதார தேக்கம் போன்றவற்றைக் குறிக்கலாம்.