AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்க நகைகளை வீட்டிலேயே பளபளப்பாக சுத்தம் செய்வது எப்படி? இந்த சிம்பிள் டிப்ஸை டிரை பண்ணுங்க!

Easy Gold Cleaning Tip : மக்கள் அனைவரும் தங்க நகைகள் வாங்கி அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நாம் தினமும் அணியும் தங்க நகைகள் தூசி மற்றும் அழுக்கால் எளிதில் கறை படிகின்றன. அவற்றை கடையில் எடுத்துச் சென்று சுத்தம் செய்தால் நிறைய செலவாகும். இந்த கட்டுரையில் வீட்டிலேயே எளிமையாக தங்க நகைகளை எப்படி சுத்தம் செய்வது என பார்க்கலாம்.

தங்க நகைகளை வீட்டிலேயே பளபளப்பாக சுத்தம் செய்வது எப்படி? இந்த சிம்பிள் டிப்ஸை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Jun 2025 23:16 PM IST

தங்கத்தின் (Gold) மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் தேவையும் மதிப்பும் மேலும் அதிகரிக்கும் என்பதால் அனைவரும் தங்கத்தில் முதலீடு (Investment) செய்ய விரும்புகின்றனர். தங்கம் வெறும் அலங்கார பொருளாக மட்டும் இல்லாமல் அதன் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தை மிகச் சரியாக பார்தது வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு தங்கத்தை பராமரிப்பதும் முக்கியம். இருப்பினும், அவற்றைப் புதியது போல பளபளப்பாக வைத்திருக்க அவற்றை முறையாக சுத்தம் செய்வது முக்கியம். நாம் தினமும் அணியும் தங்க நகைகள் தூசி மற்றும் அழுக்கால் கறைபடுகின்றன. வீட்டிலேயே அவற்றை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பலர் தங்க நகைகளை வாங்கி அணிய விரும்புகிறார்கள். ஆனால் அவற்றை சுத்தமாக வைத்திருப்பதில் அவர்களுக்கு அதிக அக்கறை இல்லை. உண்மையில், நகைகள் பளபளப்பாக இருக்க, நீங்கள் அவற்றை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இது நகைகளின் நீடித்துழைப்பையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு உங்கள் தங்க நகைகளைப் புதியது போலப் பிரகாசிக்கச் செய்யலாம். இதற்கு இரண்டு முக்கிய பொருட்கள் மட்டுமே தேவை.

தங்க நகைகளை புதிது போன்று பளபளப்பாக்குவது எப்படி?

வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சமையல் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுத்தும் வாஷிங் பவுடரை கலக்கவும். இந்தக் கலவையை தங்க நகைகளில் தடவி, மென்மையான பிரஷ் அல்லது பழைய மென்மையான துணியால் மெதுவாகத் துடைக்கவும். துடைக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். பின்னர் சுத்தமான தண்ணீரில் கழுவவும், மென்மையான, உலர்ந்த துணியால் மீண்டும் துடைக்கவும்.

இந்த முறையில், உங்கள் தங்க நகைகள் மீண்டும் புதியது போல் ஜொலிக்கும். அவற்றின் மீதுள்ள தூசியும் அழுக்கும் மறைந்து, அவற்றின் உண்மையான அழகை வெளிப்படுத்தும். குறிப்பாக தீபாவளி, பிறந்த நாள், திருமண விழாக்களின் போது, இந்த முறையில் சுத்தம் செய்யப்பட்ட நகைகளை அணிந்தால் அவை புதிது போன்ற தோற்றத்தை அளிக்கும்.  இந்த முறை மிகவும் பாதுகாப்பானது. கடைகளுக்கு எடுத்து சென்று அதிகம் செலவழிப்பதை விட வீட்டிலேயே சிறிது நேரம் செலவிடுவதன் மூலம் உங்கள் நகைகளைப் பளபளக்கச் செய்ய முடியும்.

தங்க நகைகளை விரும்பும் அனைவரும் அதை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும். மேற்கண்ட முறையைப் பின்பற்றுவதன் மூலம், அதிக பணம் அல்லது கடின முயற்சியோ இல்லாமல் உங்கள் நகைகளின் அழகைப் பாதுகாக்கலாம்.

Follow Us