Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: சிறுவர்களின் பேவரைட்! சீஸ் கார்ன் ரோல்ஸ் எளிதாக இப்படி செய்யுங்க..!

Cheesy Corn Rolls Recipe: இந்த கட்டுரை சீஸ் கார்ன் ரோல்ஸ் செய்வது எப்படி என்பதை விளக்குகிறது. வீட்டில் எளிதாகவும், குறைந்த செலவில் செய்யக்கூடிய இந்த சிற்றுண்டி, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள், செய்முறை, மற்றும் சில குறிப்புகள் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. உங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி, சத்தான சிற்றுண்டியை வீட்டிலேயே தயார் செய்ய இந்த செய்முறை உதவும்.

Food Recipe: சிறுவர்களின் பேவரைட்! சீஸ் கார்ன் ரோல்ஸ் எளிதாக இப்படி செய்யுங்க..!
சீஸ் கார்ன் ரோல்ஸ்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 20:59 PM

தினம் தினம் புதுவிதமான உணவு வகைகளை ருசிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதன்படி, மக்கள் சாலையோர கடைகள், மால்களுக்கு சென்று பணத்தை அதிகளவில் செலவு செய்கின்றனர். இவை உங்கள் பணத்தை வீணடிப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் உடல் ஆரோக்கியத்தையும் (Health Issues) கெடுக்கும். இவற்றில் இருந்து தப்பிக்க, இது மாதிரியான உணவுகளை நம்மால் வீட்டிலேயே செய்ய முடியும். அந்தவகையில், இன்று சீஸ் கார்ன் ரோல்ஸ் (Cheesy Corn Rolls) எப்படி செய்வது என்று பார்க்கலாம். இவற்றை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், தினம் தினம் கேட்டு அடம் பிடிப்பார்கள். இந்த ரெசிபி உங்களுக்கு தேவையான சுவையை கொடுக்கும்.

சீஸ் கார்ன் ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்..

  • உருளைக்கிழங்கு – 3
  • கார்ன் – அரை கப்
  • சீஸ் – அரை கப்
  • துருவிய பூண்டு – 1 டீஸ்பூன்
  • கார்ன்ப்ளார் மாவு – 1 டீஸ்பூன்
  • பிரட் – 4
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – கால் டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

சீஸ் கார்ன் ரோல்ஸ் செய்வது எப்படி..?

  1. உருளைக்கிழங்கு மற்றும் கார்னை தனித்தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, உருளைக்கிழங்கை தோலுரித்து மசிக்கவும்.
  2. கார்ன், துருவிய பூண்டு, கார்ன்ப்ளார் மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  3. அடுத்ததாக, எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை மெல்லியதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதனை மேலே தயாரித்து வைத்துள்ள கலவையில் ரொட்டி துண்டுகளை ஒன்றாக கலக்கவும்.இப்போது, சிறிய உருண்டைகளாக பிடித்து எடுத்துக்கொள்ளவும்.
  4. இந்த உருண்டைகளில் உங்கள் விரலால் துளைகளை ஏற்படுத்தி, சீஸை நன்றாக தடவவும். அதன்பின்னர், துளைகளை மூடி, அவற்றை ரோல்களாக உருட்டவும். இந்த வழியில் அனைத்து உருண்டைகளையும் உருட்டி, அவை பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும். அவ்வளவுதான், சீஸ் கார்ன் ரோல்ஸ் ரெடி. இவற்றை தக்காளி சாஸூடன் சாப்பிட்டால் டேஸ்ட் அள்ளும்.