அடர்ந்த காட்டில் அழகான நீர் வீழ்ச்சி.. ஆர்ப்பரித்து கொட்டும் இரட்டை அருவி.. டால்பின் நோஸ் வியூ பாயிண்ட்.. நீலகிரியில் இப்படியொரு இடமா! | TV9 Tamil News

அடர்ந்த காட்டில் அழகான நீர் வீழ்ச்சி.. ஆர்ப்பரித்து கொட்டும் இரட்டை அருவி.. டால்பின் நோஸ் வியூ பாயிண்ட்.. நீலகிரியில் இப்படியொரு இடமா!

Updated On: 

26 Apr 2026 13:33 PM

 IST

Catherine Falls Tourist Spot: தமிழகத்தில் பிரம்மிக்க வைக்கும் ஏராளமான சுற்றுலா தலங்கள் மறைந்துள்ளன. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் குளிர்ச்சியான கால நிலையில், இரட்டை அருவியுடன் அமைந்துள்ளது கேத்தரின் நீர் வீழ்ச்சி. இங்கு என்னென்ன உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1 / 5தமிழகத்தில்  கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  மே 1- ஆம் தேதி முதல்  வெப்ப அலை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.  இதனால்,  ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே  முடங்கி கிடக்கின்றனர்.  மேலும்,  கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக  குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள்,  குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி பகுதிகள்  உள்ளிட்ட  குளிர்ச்சி நிலவும் சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.  அந்த வகையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள்  சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மே 1- ஆம் தேதி முதல் வெப்ப அலை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி பகுதிகள் உள்ளிட்ட குளிர்ச்சி நிலவும் சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.

2 / 5

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பிரம்மிக்க வைக்கும் அழகுடன், குளிர்ச்சி நிறைந்த சூழலுடன் அமைந்துள்ளது கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதி. இங்கு சுற்றுலா சென்றால் பல்வேறு சுற்றுலா இடங்களை உள்ளம் குளிர கண்டு களிக்கலாம். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ளது கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதி. இங்கு, படர்ந்து விரிந்த அடர்ந்த காடுகள், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காணப்படும் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைகளுக்கு நடுவே வானத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் கேத்தரின் நீர்வீழ்ச்சி முக்கிய இடமாக விளங்கி வருகிறது.

3 / 5

இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் மூலிகை கலந்த கேத்தரின் நீர்வீழ்ச்சியில் மூலிகை குளியல் போட்டு மகிழலாம். இந்த நீர் வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவது முக்கியாக பார்க்கப்படுகிறது. கேத்தரின் நீர்வீழ்ச்சியை கண்டு கழித்து விட்டு அப்படியே சற்று நகர்ந்து சென்றால் குன்னூர் பகுதியில் டால்பின் நோஸ் வடிவமைப்பு போல காணப்படும் பகுதியில் இருந்து கேத்தரின் நீர்வீழ்ச்சியின் மொத்த அழகையும் கண்கள் குளிர கண்டு ரசிக்கலாம். மேலும், டால்பின் நோஸ் பகுதியையும் சுற்றி பார்க்கலாம்.

4 / 5

புகைப்பட விரும்பிகளும், சுற்றுலா விரும்பிகளும் இந்த பகுதிக்கு கண்டிப்பாக சுற்றுலா சென்று வரலாம். ஏனென்றால், பசுமையான தேயிலை தோட்டம், கேத்தரின் நீர்வீழ்ச்சியின் முழு அழகு, அடர்ந்த காட்டுப் பகுதி ஆகியவற்றின் வழியாக சுற்றுலா செல்கையில் இந்த பகுதிகளை படம் பிடிக்காமல் இருக்க முடியாது. இந்த நீர் வீழ்ச்சியானது நீலகிரி மலைத்தொடரில் 2- ஆவது மிகப்பெரிய அருவி ஆகும்.

5 / 5

இந்த அருவியின் மொத்த உயரம் 76 மீட்டர் அதாவது 250 அடி உயரம் ஆகும். கோத்தகிரியில் காபி தோட்டங்களை அறிமுகப்படுத்தியதாக கூறப்படும் எம். டி. காக்பர்ன் மனைவி கேத்தரின் பெயரை அந்த நீர் வீழ்ச்சிக்கு பெயராக இடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது இரண்டு அடுக்குகளாக விழுகும் ஒரு அழகான நீர்வீழ்ச்சியாகும். கோத்தகிரியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், குன்னூரில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவிலும் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

Follow Us