4 பெண் குழந்தைகள்.. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மீண்டும் பிரசவித்த தம்பதி.. காத்திருந்த டிவிஸ்ட்!

Woman Gave Birth To Three Children In One Delivery | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் 5வது ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், 5வது பிரசவத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

4 பெண் குழந்தைகள்.. ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மீண்டும் பிரசவித்த தம்பதி.. காத்திருந்த டிவிஸ்ட்!

மாதிரி புகைப்படம்

Published: 

30 Jan 2026 11:12 AM

 IST

நகரி, ஜனவரி 30 : ஆந்திர பிரதேசத்தை (AP – Andhra Pradesh) சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு ஆண் குழந்தை வேண்டி அவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

5வது பிரசவத்தில் தம்பதிக்கு காத்திருந்த டிவிஸ்ட்

ஆந்திர பிரதேச மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பிரம்ம சமுத்திரம் நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், ஒரு ஆண் குழந்தை வேண்டும் என தம்பதி விரும்பியுள்ளனர். அதன்படி, ஐந்தாவது குழந்தையை பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த ஐந்தாவது பிரசவத்தில் தான் அவர்களுக்கு மிகப்பெரிய டிவிஸ்ட் காத்திருந்துள்ளது.

இதையும் படிங்க : புனே விமான விபத்து.. அஜித்பவாருடன் பலியான 4 பேர்.. மனதை உருக்கும் தகவல்கள்!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

ஐந்தாவது குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதி முடிவு செய்த நிலையில், கவிதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது கவிதாவுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது, ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் படிங்க : திருமணம் முடிந்த 45 நாட்களில் காதலனுடன் சென்ற பெண்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்!

ஆண் குழந்தையுடன் கூடுதல் பரிசாக கிடைத்த 2 பெண் குழந்தைகள்

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஐந்தாவதாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த தம்பதிக்கு ஆண் குழந்தையுடன் கூடுதலாக இரண்டு பெண் குழந்தைகள் பரிசாக கிடைத்துள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குட்டி யானையின் பிறந்த நாளை கேக் வெட்டிக்கொண்டாடிய நபர் - வைரலாகும் வீடியோ
டிரைவிங் லைசென்ஸ் விதிமுறைகளில் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்
லேண்டடிங் கியரை திறக்க முடியாத நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நாசா விமானம்
40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்