Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர்.. ஊடக சந்திப்பில் விளக்கம் கொடுத்த பெண் ராணுவ அதிகாரிகள்!
இந்தியா முழுவதும் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இப்படியான நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தி அழித்தது. நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த குழுவிற்கு 2 பெண் ராணுவ அதிகாரிகள் தலைமை தாங்கியது பேசுபொருளாக மாறியது. கடந்த 2025 ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் ஆகும். இதுதொடர்பாக ஊடகங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் விளக்கமளிக்க சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த குழுவில் 2 பேர் பெண்கள் என்பது மிகப்பெரிய அளவில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
பெண் அதிகாரிகள் தலைமை தாங்க காரணம்
2 woman officers of the Indian Armed Forces addressing the nation on #OperationSindoor 👏🏻🇮🇳
Some moments just write themselves and become epics.
What a powerful picture.
Col Sofia Qureshi and Wing Commander Vyomka Singh. pic.twitter.com/jqypSfxBVw
— Amoxicillin (@__Amoxicillin_) May 7, 2025
விளக்கக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இரண்டு பெண் அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தது பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், இந்த தாக்குதலில் கணவனை பறிகொடுத்த பெண்களுக்கு ஆதரவாக நிற்பதையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆக இந்தியா எப்போது மத நல்லிணக்கத்தை பேணும் என்பதை வெளிப்படையாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
நிலவரம் உன்னிப்பாக கண்காணிப்பு
இப்படியான நிலையில் மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையாக திகழ்ந்த பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு இடத்திலும் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நீண்ட காலமாக பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் பயங்கரவாதத்தின் மையம்” என்று கருதப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் அதிரடியான தாக்குதலில் 80 முதல் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலைமையை ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளும் உறுதுணையாக இருக்கும் எனவும், தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 4 பாகிஸ்தானும், 5 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.