Duologue NXT : உள்ளுணர்வை நம்பினால் வெற்றி நிச்சயம் – நடிகை ரித்தி டோக்ரா உரையாடல்
Duologue NXT : டிவி9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பருன் தாஸ் டுயோலாக் நெக்ஸ்ட் (Duologue NXT) என்ற நிகழச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் புதிய எபிசோடில் பிரபல நடிகை ரித்தி டோக்ரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பருன் தாஸ் - ரித்தி டோக்ரா
டிவி 9 நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பருன் தாஸ் தொகுத்து வழங்கும் டூயோலாக் நெக்ஸ்ட் (Duologue NXT) நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், பாலிவுட் மற்றும் டெலிவிஷன் உலகில் தனித்துவமான தடம் பதித்துள்ள நடிகை ரித்தி டோக்ரா பங்கேற்று தனது பயணம், தன்னம்பிக்கை மற்றும் வெற்றியை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆழமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த எபிசோட் செப்டம்பர் 29, 2025 அன்று 10.30 மணிக்கு நியூஸ் 9 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. மேலும் டூயோலாக் யூடியூபிலும் நியூஸ் 9 பிளஸ் ஆப்பிலும் இந்த வீடியயோவை உங்களால் பார்க்க முடியும். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நடிகையாக மாறியது என் விதி
இந்த உரையடாலின் ஒரு பகுதியாக நடிகை ரித்தி டோக்ரா தனது ஆரம்ப காலத்தை நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், விதி என்னை நடிகையாக்கியது. ஆரம்பத்தில் கார்ப்பரேட் டிவி, விளம்பர துறையில் இருந்தேன். ஆனால் நான் என் வாழ்க்கையின் தொழிலதிபராக வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. நடிப்பு ஒரு திட்டமல்ல என்று கூறினார். டான்ஸ் மூலம் தனது ஆற்றலை வெளிக்கொணர்ந்த அவர், ஷியாமக் டாவரின் டான்ஸ் குழுவில் இருந்த அனுபவமும், பின்னர் நடிப்பு துறைக்குள் வந்ததும் அவருக்கு விடுதலை உணர்ச்சியை தந்ததாகவும் பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர், டான்ஸ் ஆகட்டும், நடிப்பு ஆகட்டும் அந்த தருணத்தில் நான் முழுமையாக மூழ்கி விடுகிறேன். யாரும் என்னைத் தொட முடியாது, அது என் முழுமையான சுதந்திரம் என்றார்.
பருன் தாஸின் பார்வை
தனது சொந்த வாழ்க்கைத் திட்டங்களில் உறுதி, திட்டமிடல், ‘தோல்வி எனும் வார்த்தையே இல்லை’ என்ற மனப்பாங்குடன் முன்னேறியவர் பருன் தாஸ். ரித்தியின் அனுபவங்களை கேட்ட பின் அவர், “நான் எப்போதும் ‘make it happen’ என்ற எண்ணத்தில் இருந்தவன். ஆனால் ரித்தியை பேசியதை கேட்டபின், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையிலும், உள்ளுணர்வை பின்பற்றுவதிலும் அழகு இருக்கிறது என உணர்கிறேன் என்று கருத்து தெரிவித்தார். ரித்தி தனது சிந்தனை முறையை அனாலிடிக்கல் திங்கர் என விவரித்தார். பாராட்டு எனக்கு ஒன்றும் கற்றுத்தராது. விமர்சனமே என்னை வளர்க்கிறது என்று சிரித்தபடி பகிர்ந்தார்.
பாத்திரத் தேர்வில் துணிச்சல்
தனது ஆரம்பகால கட்டத்தில் Maryada என்ற டிவி தொடர் மூலம் பெண்களின் உரிமையை வலியுறுத்திய கதாபாத்திரத்தை ஏற்றார். அதன்பின் ஓடிடி மற்றும் திரைப்படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வருகிறார். இது குறித்து பேசிய அவர், என்னை ஒருபோதும் ஒரு பெட்டிக்குள் அடக்க முடியாது. என் திட்டங்கள் அடிக்கடி மாறிவிடும். ஆனால் கடவுளின் திட்டமே சிறந்தது. என்னைத் தூண்டும், சொல்லப்பட வேண்டிய கதைகளில் நடித்து வருகிறேன் என்று பேசினார்.