PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை” இஸ்ரோ தலைவர் தகவல்..

இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட  PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில்  பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார்

PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது.. இலக்கை அடையவில்லை  இஸ்ரோ தலைவர் தகவல்..

PSLV C- 62 ராக்கெட் தோல்வியடைந்தது

Updated On: 

12 Jan 2026 12:38 PM

 IST

ஆந்திரா, ஜனவரி 12: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையாமல் தோல்வியடைந்தது. தொடர்ந்து, தோல்விக்கான தரவுகளை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களை PSLV-C62 ராக்கெட் சுமந்து சென்றது. 3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ x தள பதிவு:

 

3வது நிலையின் முடிவில் ஒரு இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டதாகவும், இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 ராக்கெட்டும் இதேபோல், 3வது நிலையில் தோல்வியை சந்தித்தது. அதேபோல், தற்போது அதே 3வது நிலையில் மீண்டும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மேலும் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், PSLV என்பது ஒரு 4 கட்ட வாகன் ஆகும். இதில், இன்று விண்ணில் ஏவப்பட்ட  PSLV C- 62 ராக்கெட்டின் 3வது நிலை எதிர்பார்த்தபடி, பயணித்ததாகவும், 3வது நிலையில்  பயணப் பாதையில் இருந்து வாகனம் விலகி காணப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால், திட்டமிடப்பட்ட பாதையில் பயணத்தைத் தொடர முடியவில்லை. நாங்கள் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும் வரும் தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.

PSLV C- 61 ராக்கெட் தோல்வி:

முன்னதாக, கடந்த 2025 மே மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட PSLV C- 61 ராக்கெட் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட்டிலும் 1,696.24 கிலோ எடை கொண்ட இஒஎஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. அது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாக இருக்கும் என எதிர்பார்கப்பட்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை