உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..

PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பேசுகையில், “ சிறு, குறு தொழில் மக்களைப் பற்றி பேசுகையில், “அவர்களுக்கு தேவையான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோரிடம் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..

பிரதமர் மோடி

Published: 

21 Sep 2025 19:52 PM

 IST

டெல்லி, செப்டம்பர் 21, 2025: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் செப்டம்பர் 21, 2025 தேதியான இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22, 2025 முதல் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வர இருப்பதாகவும், இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் முன்னேற உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கி இருப்பதாகவும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களின் வரி ஐந்து சதவீதத்திற்குள் வந்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, நாட்டு மக்கள் அனைவருமே உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு பொருட்களை வாங்குவதில் முனைப்பு காட்ட வேண்டும்:


அதனைத் தொடர்ந்து அவர், “ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும். அனைவருமே உள்நாட்டு தயாரிப்புக்கு முனைப்பு காட்ட வேண்டும். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால்தான் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும்.

சர்வதேச அளவில் சிறந்த தரத்துடன் இந்திய நிறுவனங்கள் பொருட்கள் தயாரிக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறந்த தரத்தோடு அமைய வேண்டும். நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தத் தொடங்கினால், இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடையும்,” என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க: தன்னிறைவு பெற்ற இந்தியா.. பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் – பிரதமர் மோடி..

2.5 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு குறையும்:

மேலும் சிறு, குறு தொழில் மக்களைப் பற்றி பேசுகையில், “அவர்களுக்கு தேவையான பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோரிடம் கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க: எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!

இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூ. 2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும். ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் உயர்வுக்கு இந்திய ஜிஎஸ்டி வரி குறைப்பு உதவும். இது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.