5 நாடுகள்.. 8 நாட்கள்.. பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்.. ஏன் முக்கியம்?

PM Modi 5 Nation Trip : பிரதமர் மோடி 2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபயா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் நீண்ட நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது. கடைசியாக பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு ஆறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

5 நாடுகள்.. 8 நாட்கள்.. பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்.. ஏன் முக்கியம்?

பிரதமர் மோடி

Updated On: 

02 Jul 2025 08:56 AM

டெல்லி, ஜூலை 02 : பிரதமர் மோடி 2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் (PM Modi 5 Nation Tour) மேற்கொள்கிறார். பிரதமர் மோடி 2025 ஜூலை 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 8 நாட்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் நீண்ட நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் இதுவே ஆகும். கடைசியாக 2015ஆம் ஆண்டு எட்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஆறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதன்பிறகு, 10 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  இந்த பயணத்தில் பிரதமர் மோடி முதல்முறையாக பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார்.  அதன்படி, கானா, டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

கானா

முதற்கட்டமாக பிரதமர் மோடி 2025 ஜூலை 2ஆம் தேதியான இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கானா நாடுக்கு செல்கிறார். 30 ஆண்டுகளில் இந்தியா பிரதமர் ஒருவர் கானாவுக்கு முதல் பயணம் செல்வது இதுவாக அமையும். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் கானா அதிபர் இருவரும் இருதரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்றவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து, பிரதமர் மோடி, ஜூலை 3ஆம் தேதி டிரினிட்ட அண்டு டுபாகோ நாட்டுக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

டிரினிட்ட அண்டு டுபாகோ

இந்த பயணத்தின்போது, டொபாகோ அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இங்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து 40 சதவீதம் மக்கள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் குடிபெயர்ந்துள்ளனர். இதனால், இந்த பயணம் இந்தியாவுடனான இந்த நாட்டின் உறவை மேம்படுத்தும்.

அர்ஜென்டினா

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 2025 ஜூலை 4ஆம்தேதி அர்ஜென்டினாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அதிபர் ஜேவியர் மிலேயுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 2024 ஆம் ஆண்டில் இந்தியா அர்ஜென்டினாவின் ஐந்தாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் ஏற்றுமதி இடமாகவும் இருந்தது.

பிரேசில் பயணம்

அதைத் தொடர்ந்து, 2025 ஜூலை 5ஆம் தேதி பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். இந்த பயணம் பிரதமர் மோடிக்கு பெரிதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  ஏனென்றால் பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமராக மோடி பிரேசிலுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.

17வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாடு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. உச்சி மாநாட்டி கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பருவநிலை, ஏஐ தொழில்நுட்பம், பாதுகாப்பு, அமைதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உரை நிகழ்த்த உள்ளார். இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடியின் பதிவு

நமீபா

இறுதியாக பிரேசிலில் இருந்த நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இது இந்தியாவிலிருந்து நமீபியாவிற்கு ஒரு பிரதமர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகும். தனது பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி, அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். நமீபியா நாடாளுமன்றத்திலும் அவர் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.