2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும், முழு உலகமும் ஆந்திராவை கவனிக்கிறது – பிரதமர் மோடி பேச்சு
Narendra Modi : மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மூலம் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 'சூப்பர் ஜிஎஸ்டி - சூப்பர் சேமிப்பு' என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
‘சூப்பர் ஜிஎஸ்டி (GST) சூப்பர் சேமிப்பு’ என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்டோபர் 4, 2025 அன்று ஆந்திரா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.13,430 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டன. முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், நர லோகேஷ், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி , சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் என தெலுங்கில் தனது உரையைத் தொடங்கினார். இதனால் அரங்கில் கரவொலி எழுந்தது. அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
‘2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்’
நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ”அஹோபிலம் நரசிம்ம சுவாமி மற்றும் மகாநந்தி ஈஸ்வரை வணங்குவதாக மோடி கூறினார். மேலும் மந்திராலயம் ராகவேந்திர சுவாமியில் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஜோதிர்லிங்கம் சோமநாதரின் பூமியான குஜராத்தில் நான் பிறந்தேன். விஸ்வநாதரின் பூமியான காசிக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியின் ஆசிகளைப் பெற்றேன். ஆந்திரப் பிரதேசம் சுயமரியாதை மற்றும் கலாச்சாரத்தின் தாயகம்” என்றார்.
இதையும் படிக்க : பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி.. இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..
மேலும் பேசிய அவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் ஆட்சியின் கீழ், ஆந்திரா ஒரு சக்திவாய்ந்த தலைமையைக் கொண்டுள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குகிறது. கடந்த 16 மாதங்களில் ஆந்திராவின் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியும் அமராவதியும் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுகின்றன. 2047 ஆம் ஆண்டுக்குள் நாம் வளர்ந்த இந்தியாவாக மாறுவோம்.
மத்திய மாநில அரசின் திட்டங்கள் காரணமாக மாநிலத்தில் இணைப்பு பலப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அரசின் திட்டங்கள் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். எந்தவொரு நாடு அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எரிசக்தி பாதுகாப்பு மிக முக்கியமானது . பரிமாற்றத் திட்டங்களுடன் நாட்டின் எரிசக்தி திறன் அதிகரிக்கும்.
முழு உலகமும் கவனிக்கிறது
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமமும் மின்மயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் மின்சார நுகர்வு 1400 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு போதுமான மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன. இயற்கை எரிவாயு குழாய் மூலம் 15 லட்சம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. சித்தூர் எல்பிஜி ஆலை தினமும் 20,000 சிலிண்டர்களை நிரப்பும் திறன் கொண்டது.
இதையும் படிக்க : இறக்குமதி செலவு கம்மி.. வேலைவாய்ப்பு அதிகம் – பிரதமர் மோடி சொன்ன பாசிட்டிவ் விஷயங்கள்!
வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய பலதரப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சப்பாவரம் – ஷீலாநகர் நெடுஞ்சாலையுடன் இணைப்பு மேலும் மேம்படும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. ஆந்திராவின் இலக்கு இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்க்கும். மத்திய, மாநில அரசின் கீழ் ஆந்திராவின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும். இந்தியாவையும் ஆந்திராவின் வேகத்தையும் செயல்திறனையும் முழு உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றார்.