பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி.. வைரலான போஸ்டர்.. அதிரடி காட்டிய போலீஸ்!

Party Against Culture in Chhattisghar | சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறை நிகழ்ச்சியை நிறுத்து அது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளனர்.

பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி.. வைரலான போஸ்டர்.. அதிரடி காட்டிய போலீஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Sep 2025 08:45 AM

 IST

ராய்ப்பூர், செப்டம்பர் 19 : சத்தீஸ்கரில் (Chattisghar) உள்ள ஒரு பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சமூக ஊடகங்களில் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சி தொடர்பான தகவல் வெளியாகி அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாண விருந்து நிகழ்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 21, 2025 அன்று அந்த வீட்டில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக சமூக போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வந்துள்ளது. அந்த போஸ்டர்களில் பண்ணை வீட்டில் நிர்வான விருந்து நிகழ்ச்சி சரியாக மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும், இரவு முழுவதும் இந்த விருந்து நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருந்துள்ளது. இந்த போஸ்டர்கள் காவல்துறை கவனத்திற்கு சென்றுள்ளது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்த மூத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க : கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?

நேரில் சென்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார்

உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், பண்ணை வீட்டின் உரிமையாளர் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டவர்கள், டிஜிட்டல் புரோமோட்டர்கள் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுமார் 7 பேரை கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

இதையும் படிங்க : நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு.. இரு ரவுடிகள் என்கவுண்டர்.. பரபரப்பில் உத்தரப்பிரதேசம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த பகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நிர்வாண விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.