“நீ எனக்கு தான்” இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!

Uttar Pradesh Crime News : உத்தர பிரதேசத்தில் இளம்பெண் மீது ஆசீட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அந்த பெண் உயிருக்கு போராடி வருகிறார். அந்த பெண்ணுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது.

நீ எனக்கு தான் இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்.. திருமணத்திற்கு முன் நடந்த சோகம்!

மாதிரிப்படம்

Updated On: 

03 May 2025 15:10 PM

 IST

உத்தர பிரதேசம், மே 03 : உத்தர பிரதேசத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசி உள்ளார். உத்தரபிரதேசத்தின் மௌ மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரசேத மாநிலம் மௌ பகுதியைச் சேர்ந்தவர் ரீமா (25). இவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அவரது குடும்பத்தினர் முழு வீச்சில் தயாராகி கொண்டிருந்தனர். ரீமாவின் தந்தை இறந்துவிட்டதாலும், திருமண ஏற்பாடுகளை ரீமா தானே கவனித்துக் கொண்டிருந்தார்.

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

இவர் ராம் ஜனம் சிங் என்ற நபருடன் உறவில் இருந்ததாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களுக்கு அவரிடம் பேசுவதை ரீமா நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால், ராம் ஜனம் சிங் கடுப்பாக இருந்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் ரீமாவிடம் பலமுறை முறையிட்டதாக தெரிகிறது.

ஆனால்,  இதற்கு ரீமா மறுத்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, வேறொரு ஒருவரை திருமணம் முடிவு எடுத்த ரீமாவுக்கு 2025 மே 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதானல், இந்த திருமணத்தை நிறுத்த ராம் ஜனம் சிங் முடிவு செய்தார். இந்த நிலையில், 2025 மே 1ஆம் தேதி ரூ.20,000 பணத்தை வங்கியில் இருந்து எடுத்துவிட்டு ரீமா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் நடந்த சென்ற ரீமாவை, இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வந்த ராம் ஜனம் சிங் மறித்துள்ளார். “நீ எனக்கானவள்.. நீ வேறு யாருக்கும் சொந்தமில்லை” என்று கூறி ரீமா மீது ஆசீட்டை வீசி விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இதனால், அலறி துடித்த ரீமாவை அக்கம் பக்கத்தின் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆசிட் வீசி சென்ற இளைஞர்

60 சதவீத தீக்காயங்களுக்கு ஆசம்கரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண்ணின் முகம், தோள்பட்டை, கழுத்து மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரீமா தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் படல் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ரீமா தன்னை திருமணம் செய்து கொள்ளாததால் ஆசிட் அடித்தாக படேல் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 2025 மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் தனது மனைவி இருப்பதாக சந்தேகித்து கணவர் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories
Bihar Election Results 2025 : பீகாரில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை.. மெஜாரிட்டியை நெருங்கியது!
டெல்லியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உமர் நபி.. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதி வீடு இடிப்பு..
Bihar Election Result: பீகாரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்..
இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை… ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கும் வாய்ப்பு – என்ன நடக்கிறது?
டெல்லியைத் தொடர்ந்து சீரியல் பிளாஸ்ட்… இந்த 4 நகரங்களுக்கு டார்கெட் – வெளியான பகீர் தகவல்கள்
மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாடு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் – என்ன காரணம்?