‘ரூ.1,450 கோடி சொத்து இருக்கு’.. வாடகை கார் ஓட்டும் தொழிலதிபர்.. நெகிழ வைக்கும் பின்னணி!

Business man drives Uber: வாடகை கார் ஓட்டும் தொழிலதிபரின் பணிவும், சமூகப் பொறுப்புணர்வும் தற்போது உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. பெரும் செல்வமும் வெற்றியும் பெற்றவராக இருந்தாலும், சமூக நலனுக்காக தன்னுடைய உழைப்பை அர்ப்பணிக்கும் இந்த முதியவர் பலருக்கு ஓர் முன்மாதிரியாகவே உள்ளார்.

‘ரூ.1,450 கோடி சொத்து இருக்கு’.. வாடகை கார் ஓட்டும் தொழிலதிபர்.. நெகிழ வைக்கும் பின்னணி!

மாதிரிப் படம்

Updated On: 

02 Nov 2025 16:49 PM

 IST

ஃபிஜி (Fiji) நாட்டைச் சேர்ந்த 86 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்திய தொழில்முனைவர் ஒருவர் அந்த நாட்டிற்கு சென்றபோது, இந்த முதியவரை சந்திக்க நேர்ந்துள்ளது. அப்போது, அவரிடம் பேசும்போது அவரைப் பற்றிய இந்த சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது.  இவ்வளவு முதுமையிலும், பெரும் செல்வந்தராக இருந்தபோதிலும் அவர் தினமும் வாடகை கார் ஓட்டுகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வளவு பணம் இருந்தும் போதவில்லையா? எதற்காக இந்த முதுமையிலும் அவர் வாடகை கார் ஓட்டுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாடகை கார் ஓட்டும் தொழிலதிபர்:

இந்தியாவே சேர்ந்த நவ் ஷா (Nav Shah) என்ற இளம் தொழில்முனைவர் தனது தொழில் நிமித்தமாக ஃபிஜி நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அப்போது, அங்கு அவர் Uber காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தன்னை அழைத்துச்செல்ல வந்த அந்த ஓட்டுநரிடம் அவர் பேச்சுக்கொடுக்கும் போதே, இந்த நெகிழ வைக்கும் பின்னணி தெரியவந்துள்ளது.  அந்த ஓட்டுநான முதியவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சரத் குமார் ஆவார். அவரிடம், வாடகை கார் ஓட்டி கிடைக்கும் பணத்தில் உங்கள் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று நவ் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர், தான் ஒரு தொழிலதிபர் என்றும், ஆண்டுக்கு $175 மில்லியன் (சுமார் ₹1,450 கோடி) வருமானம் ஈட்டும் வியாபார குழுமத்தை நடத்தி வருவதாகவும் கூறி வியப்படைய வைத்துள்ளார்.

இந்திய சிறுமிகளுக்கு கல்வி உதவி:

அப்படியென்றால், எதற்காக வாடகை கார் ஓட்டுகிறீர்கள் என்று வியப்புடன் நவ் ஷா கேட்கவும், “இந்த ஊபர் மூலம் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் இந்தியாவில் உள்ள சிறுமிகளின் கல்விக்காக அனுப்புகிறேன்.” என்று கூறி திகைக்க வைத்துள்ளார். அதோடு, கடந்த பத்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 24 சிறுமிகளின் கல்விச் செலவை ஏற்று வருவதாகவும், இதுவரை 240க்கும் மேற்பட்ட சிறுமிகள் அவரது உதவியால் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கற்றுள்ளதாகவும் பெருமிதமாக கூறியுள்ளார்.

Also read: Melissa Cyclone: ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய மெலிஸா புயல்!

மேலும் பேசிய முதியவர் சரத் குமார், தனக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும், அவர்களை நன்கு படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதேபோல் மற்ற சிறுமிகளுக்கும் அதே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் பணிவுடன் கூறியுள்ளார். அவரது தொழிலானது பிஜி முழுவதும் பரவியுள்ளது. 13 நகைக்கடைகள், 6 உணவகங்கள், 4 சூப்பர் மார்க்கெட்கள், மேலும் ஒரு உள்ளூர் நாளிதழ் என பல துறைகளில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருந்து வருகிறார். எனினும், “மக்களிடமிருந்து விலகாமல், இயல்பு வாழ்க்கையை உணரவேண்டும்” என்ற எண்ணத்தால், இன்றும் தான் ஊபர் ஓட்டுனராக பணிபுரிவதாக தெரிவித்துள்ளார்.

நெகிழ வைக்கும் முதியவரின் வீடியோ:

இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ உடன் நவ் ஷா பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த பலரும் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர். அவரின் உதவும் மனப்பான்மை உலகம் முழுவதும் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தனது உழைப்பும், எளிமையும், கல்வி மீதான அர்ப்பணிப்பு காரணமாக, இந்த முதியவர் பலருக்கும் ஒரு முன்மாதிரி ஆகியுள்ளார். “பணம் சம்பாதிப்பது வாழ்க்கையின் இலக்கு அல்ல; அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதே உண்மையான வெற்றி” என்பதே அவரது வாழ்வியல் நமக்கு கூறும் மையக்கருத்து.