ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவிய சீனா – லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங் பகீர் தகவல்..

China's Help to Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த மோதலின் போது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் இந்தியாவின் நிலைகள் குறித்து நேரடி தகவல்களை பெற்றுக்கொண்டதாக இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவிய சீனா - லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங் பகீர் தகவல்..

லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங்

Updated On: 

04 Jul 2025 19:30 PM

இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் ஆர் சிங் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் நேரடி நிலைகள் உட்பட நிகழ்வு நேர உளவுத்துறையை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டி பீஜிங் மற்றும் இஸ்லமாபாத்திற்கும் இடையிலான ஆழமான உறவை அம்பலப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு மாநாட்டில் பேசிய லெப்டினென்ட் ஜென்ரல் ராகுல் சிங் இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு தீவிரமாக உதவியதாக தெரிவித்துள்ளார். உபகரணங்களில் அடிப்படையில் மட்டுமல்லாமல் ராணுவ ஒருங்கிணைப்பிலும் கூட சீனா உதவியதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில், பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தது ஆனால் சீனா அவர்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவு வழங்கி வந்தது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு உதவிய சீனா:

உயர்மட்ட பேச்சு வார்த்தைகளின் போது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் இந்தியாவின் நிலைகள் குறித்து நேரடி தகவல்களை பெற்றுக் கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், “ பாகிஸ்தான் ராணுவ வான் பொருளில் 81% சீனாவுடையது. இது பீஜிங் தனது நட்பு நாடு மூலம் நேரடி மோதல் சூழ்நிலைகளில் தனது ஆயுதங்களை சோதிக்க அனுமதிக்கிறது.

பாகிஸ்தானுக்கு உளவு தகவலை வழங்கிய சீனா:


சீனா, பாகிஸ்தானை ஒரு நேரடி ஆயுத ஆய்வகமாக பயன்படுத்துகிறது. இந்தியாவிற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளின் போது சீன ராணுவ உபகரணங்கள் நிகழ் நேரத்தில் எப்படி செயல்படுகிறது என பல சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன ” என பேசி உள்ளார்.

இரு நாட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் வான் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த லெப்டினென்ட் ஜெனரல் ராகுல் சிங், இந்த முறை பாகிஸ்தானுடைய தாக்குதல் மக்களை மையப்படுத்தி இல்லாமல் இருந்தது, இருப்பினும் எதிர்காலத்தில் இந்த சூழ்நிலை வேறுபட்டிருக்கும். ஒரு எல்லை இருந்தாலும் அதில் எதிரிகள் இரண்டாக இருந்தனர். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் மூன்றாக இருந்தது என சீனா பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளை குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன?

மேலும் முக்கிய செயல்பாட்டு நுண்ணுறிவுகளை பகிர்ந்து கொண்ட லெப்டினென்ட் ஜெனரல் ராகுல் சிங் ஆப்பரேஷன் சிந்தூரின் போது 21 இலக்குகள் அடையாளம் காணப்பட்டதாகவும். அவற்றில் ஒன்பது இலக்குகள் தாக்கக்கூடியதாக கருதப்பட்ட நிலையில், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல் அந்த இலக்குகளை தாக்குவதற்கான இறுதி முடிவு கடைசி ஒரு மணி நேரத்தில் தான் வந்தது என்றும் இது முப்படைகளின் முடிவு எனவும் குறிப்பிட்டார். வரும் காலத்தில் இந்தியா அனைத்து வகையான போர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் .