ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் அச்சுறுத்தல்: அசாமில் 10 பேர் உயிரிழப்பு

Japanese Encephalitis Outbreak : அசாமில் ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2025 ஆம் ஆண்டில் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரியில் மட்டும் 44 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது; இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதங்களில் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் பரவல் அதிகரித்துள்ளது.

ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் அச்சுறுத்தல்: அசாமில் 10 பேர் உயிரிழப்பு

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 Jul 2025 21:28 PM

அசாமின் (Assam) பல மாவட்டங்களில் பரவும் ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் (Japanese Encephalitis ) வைரஸ் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் காரணமாக, 2025ஆம் ஆண்டில் மட்டும் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) 44 தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை முதன்மை அலுவலர் டாக்டர் அச்ச்யுத் சந்திர பைஷ்யா தெரிவித்தார். இது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  மேலும் 2025 ஆம் ஆண்டின் முந்தைய மாதங்களை விட ஜூன் மாதத்தில் நோய் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இது மருத்துவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் இதுவரை ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் தொற்றால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ள பின்னணியிலும் இந்த அதிர்ச்சி நிலை பெருகியுள்ளது.

குவஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் மட்டும் 44 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்களுக்கு இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2015 முதல் 2024 வரை அசாமில் மரணமடைந்தோர் எண்ணிக்கை

அசாமில் கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் காரணமாக 840க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2015 ஆண் ஆண்டில் மட்டும் 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 2016 ஆம் ஆண்டு 92 பேரும், 2017 ஆம் ஆண்டில் 87 பேரும், 2018 ஆம் ஆண்டில் 94 பேரும், 2019 ஆம் ஆண்டில் 161 பேரும், 2021 ஆம் ஆண்டு 40 பேரும், 2022 ஆம் ஆண்டு 96 பேரும் 2023 ஆம் ஆண்டு 34 பேரும் 2024 ஆம் ஆண்டு 53 பேரும் உயரிழந்திருக்கின்றனர்.

கடந்த 2024 நவம்பரில், டெல்லியின் உத்தம்நகர் பகுதியில் 72 வயது நபருக்கு ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இதயம் மற்றும் நீரிழிவு குறைபாடுகள் இருந்தன. நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததால் நோய் பரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைரஸ் பரவும் முறை

ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் என்பது Culex வகை கொசுக்களின் கடியால் பரவும் வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் நீர்ப்பறவைகள் மற்றும் பன்றிகளிடையே பரவுகிறது. மனிதர்கள் இதில் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் இது மனிதர்களிடம் இருந்து இன்னொரு மனிதர்களுக்கு பரவுவதில்லை

மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதலின்படி, நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி முகாம்கள், கொசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் கலக்கம் அடையாமல், கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜப்பானீஸ் என்செபலைட்டிஸ் சிறு காய்ச்சலாகத் தொடங்கி, மூளை அழற்சி மற்றும் மயக்கம் போன்ற கடுமையான நிலைகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இது கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தீவிரமான பிரச்னையாக இருந்து வருகிறது.

Related Stories
மனித மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் கிளாசிக் பாடல்களின் ராகங்கள்.. ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு!
மகனுக்கு பெண் அலங்காரம் செய்து அழகு பார்த்த பெற்றோர்.. தண்ணீர் தொட்டியில் குதித்து குடும்பத்துடன் தற்கொலை!
தெலங்கானா தொழிற்சாலை விபத்து.. 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி!
ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு..
உயர்ந்த ஓலா, ஊபர் கட்டணம்.. புதிய விதிகள் அமல்.. இவ்வளவா?
புதுச்சேரி: சொகுசு கப்பல் பயணத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு… கலாச்சார சீரழிவு என கண்டனம்