Jammu and Kashmir Encounter: ஜம்முவில் அடுத்தடுத்து பதட்டம்! பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்!

Indian Army Operation: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், சிங்போரா கிராமத்தில் இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே கடும் மோதல் நடந்தது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். மோதலில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். இராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைந்தது.

Jammu and Kashmir Encounter: ஜம்முவில் அடுத்தடுத்து பதட்டம்! பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்!

இந்திய இராணுவ வீரர்கள்

Published: 

22 May 2025 18:04 PM

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டை (India – Pakistan Tensions) நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்தாலும், ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மீண்டும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரை அடுத்த கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரோவின் சிங்போரா பகுதியில் (Singhpora village, Chatroo) இன்று அதாவது 2025 மே 22ம் தேதி பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறை மர்றும் இந்திய இராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேரை ராணுவம் சுற்றி வளைத்தது. இருப்பினும், பயங்கரவாதிகள் தங்களது துப்பாக்கியை கொண்டு நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தநிலையில் வீரமரணம் அடைந்தார்.

ஆபரேஷன் டிராஷி:

சத்ரோவின் சிங்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதுதொடர்பாக, இந்திய இராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “2025 மே 22ம் தேதியான இன்று காலை சத்ரோவின் சிங்போரா பகுதியில் போலீசாருடன் இணைந்து, பயங்கரவாதிகளுடன் ஒரு மோதல் நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தது.

கிடைத்த தகவலின்படி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 முதல் 4 பேர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு இராணுவம் ஆபரேஷன் டிராஷி என்று பெயரிட்டுள்ளது. இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ​​அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்த மற்ற வீரர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீரமரணம் அடைந்த வீரர் யார்..?

கிஷ்த்வார் பயங்கரவாத மோதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர், மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டம், கரனாடி தாலுகாவை சேர்ந்த சிப்பாய் கெய்க்வாட் சந்தீப் பாண்டுரங் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதி காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் எல்லையாக உள்ளது. இந்த பயங்கரவாதிகளும் காஷ்மீரில் இருந்து வந்திருக்கலாம். பயங்கரவாதிகள் ஜெய்ஷ் முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​அப்பகுதியில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.