இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை.. முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பு!
India - Pakistan Hold Crucial Talks Today | இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் மே 10, 2025 அன்று மாலை 5 மணி முதல் தாக்குதல்களை நிறுத்துவதாக இரண்டு நாடுகளும் அறிவித்தன, இந்த நிலையில், இன்று ( மே 12, 2025) அது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

மாதிரி புகைப்படம்
சென்னை, மே 12 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே இன்று ( மே 12, 2025) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தியுள்ள நிலையில், எல்லைகளில் அமைதி நிலவுகிறது. இந்த நிலையில், தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற உள்ளது. எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேன் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் ஆபரேஷன் செந்துறை (Operation Sindoor) கையில் எடுத்த இந்திய அரசு, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை குறி வைத்த தாக்குதல் நடத்தியது.
அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்தியாவின் மீது தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பான சூழல் உருவானது. இதற்கிடையே, மே 10, 2025 அன்று இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தன. அதன்படி அன்று மாலை ஐந்து மணிக்கு மேல் தாக்குதல் நடத்த மாட்டோம் என இரு நாடுகளும் வாக்குறுதி அளித்தன. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் இந்தியாவின் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் அத்துமீறி ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இந்தியா பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய அரசு அதனை கண்டித்தது. இந்த நிலையில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.