பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்.. நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் எதிர்க்கட்சியினர்..
Parliament Monsoon Session: இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை 30 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை தாக்கல் செயதார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமித்ஷா
டெல்லி, ஆகஸ்ட் 20, 2025: கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை 30 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 20, 2025) மக்களவையில் அறிமுகப்படுத்தினார். யூனியன் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா, 2025 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2025 ஆகியவற்றையும் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், கூட்டுக் குழுவிற்கு இந்த மசோதாக்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ முதலமைச்சர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான விதிகளைச் சேர்க்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மசோதாக்கள் சொல்வது என்ன?
Laid the Constitution (One Hundred and Thirtieth Amendment) Bill, 2025 in the Lok Sabha. pic.twitter.com/wsohG2UP6x
— Amit Shah (@AmitShah) August 20, 2025
ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் ஒரு அமைச்சர், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் துணைநிலை ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று இந்தத் திருத்தம் கூறுகிறது. அத்தகைய ஆலோசனை வழங்கப்படாவிட்டால், அமைச்சர் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார். இதேபோன்ற சூழ்நிலையில் ஒரு முதலமைச்சராக இருந்தால், 30 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அந்தப் பதவி காலியானதாக அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க: தமிழரை நிறுத்தினால் மட்டும் போதுமா? பாஜக வேட்பாளர் குறித்து கனிமொழி கேள்வி!
இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் முன்மொழிந்தார். அப்போது, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே மோதல் மற்றும் கூர்மையான வாக்குவாதங்கள் நடந்தன.
கடும் அமளியில் எதிர்க்கட்சியினர்:
அப்போது பேசிய வேணுகோபால், இந்த மசோதாக்கள் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டதாக பாஜக கூறுவதைக் கேள்வி எழுப்பினார். மேலும், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோது திரு. ஷாவும் கைது செய்யப்பட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த மசோதாக்களை தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர், மேலும் மசோதாக்களின் நகல்களை கிழித்து எறிந்தனர்.
மேலும் படிக்க: துணை ஜனாதிபதி தேர்தல்.. சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த பிரதமர் மோடி!
மசோதா குறித்து அறிக்கை:
இது தொடர்பாக, நேற்று (ஆகஸ்ட் 19, 2025) மக்களவை உறுப்பினர்களிடையே அமித்ஷா அனுப்பிய மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்திய மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்கள் அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, பொது நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியில் இருக்கும் அமைச்சர்களின் குணாதிசயங்களும் நடத்தையும் எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”
என குறிப்பிடப்பட்டுள்ளது.