குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..

Gujarat Bridge Collapse Accident: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் இருக்கக்கூடிய மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட 45 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் ஆற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..

விபத்துக்குள்ளான பாலம்

Updated On: 

09 Jul 2025 13:26 PM

குஜராத், ஜூலை 9, 2025: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தின் மகிசாகர் ஆற்றின் மீது உள்ள கம்பீர பாலத்தின் ஒரு பகுதி ஜூலை 9 2025 தேதியான இன்று காலை இடிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் ஆற்றல் விழுந்து மூழ்கின. இந்த விபத்து காலை 7.30 மணி அளவில் நடந்துள்ளது. இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பத்ரா காவல் ஆய்வாளர் விஜய் சேரன் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வாகனங்களில் இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு வாகனங்கள் அடங்கும். மீட்பு குழுவினர் இதுவரை நான்கு பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், மேலும் ஆற்றல் சிக்கி இருக்க கூடிய பிறரை கண்டுபிடிக்கும் முயற்சிகளும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் இடிந்து விழுந்து விபத்து:

வதோதரா மாவட்டத்தின் மகிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட 45 ஆண்டுகள் பழமையான கம்பீர பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குஜராத் மாநிலம் முழுவதுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வதோதரா மாவட்டத்தில் உள்ள பத்ராவை மற்றும் ஆனந்த் மாவட்டத்துடன் இணைக்கும் இந்த பாலம் நீண்ட காலமாக பாழடைந்த நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

4 பேர் உயிரிழந்த சோகம்:


வதோதரா பாலம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே நான்கு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் ஆற்றல் மூழ்கியுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முசாப்பூர் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு லாரிகள் ஒரு பெரிய ஜீப் மற்றும் மற்றொரு ஜீப் கடந்து சென்றபோது பாலம் திடீரென இடிந்துள்ளது. அப்போது நான்கு வாகனங்களும் ஆற்றில் விழுந்து மூழ்கியது. இந்த சம்பவம் நடந்த உடனேயே உள்ளூர் வாசிகள் விரைந்த அந்த சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளனர். அதனை தொடர்ந்து பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் என அனைவருமே தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பராமரிப்பு பணியின்றி பாழடைந்த பாலம்:

பல ஆண்டுகளாக பழமையான பாலத்தை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்த போதும் நிர்வாகம் அதனை புறக்கணித்து உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியதால் பாலம் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வதோதரா மற்றும் ஆனந்த் இடையே ஆன முக்கிய இணைப்பான கம்பீரா பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்துள்ளது இதன் காரணமாக கனரக வாகனம் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்:


இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், ” இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 -ம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.