தங்க நகை, பணம்.. ஈரான் மக்களுக்கு உதவ முன்வந்த காஷ்மீர் மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..

Iran - Israel War: பிடிஐ தகவலின்படி, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றனர். பல பெண்கள் தங்களின் தனிப்பட்ட தங்க நகைகளையும் வழங்கினர். ஒரு விதவை, 28 ஆண்டுகளாக கணவரின் நினைவாக வைத்திருந்த தங்கப் பொருளையும் தானமாக வழங்கினார்.

தங்க நகை, பணம்.. ஈரான் மக்களுக்கு உதவ முன்வந்த காஷ்மீர் மக்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்..

கோப்பு புகைப்படம்

Published: 

25 Mar 2026 08:50 AM

 IST

மார்ச் 25, 2026: காஷ்மீர் பகுதியில், குறிப்பாக பட்காம் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், மேற்காசியாவில் நடைபெற்று வரும் மோதலால் பாதிக்கப்பட்ட ஈரான் மக்களுக்கு ஆதரவாக மனிதாபிமான உதவி இயக்கத்தை தொடங்கியுள்ளனர். ரமலான் பண்டிகைக்குப் பிறகு, ஷியா மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று நிவாரண உதவிகளை திரட்டினர். மக்கள் பணம் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய வெண்கலப் பொருட்களையும் வழங்கினர்.

இந்தியாவில் இருக்கும் ஈரான் தூதரக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளது. “காஷ்மீர் மக்களின் கருணை மற்றும் ஒற்றுமைக்கு மனமார்ந்த நன்றி” என பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க: ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க போவதில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்!

ஈரானுக்கு உதவ முன்வந்த காஷ்மீர் மக்கள்:

பிடிஐ தகவலின்படி, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றனர். பல பெண்கள் தங்களின் தனிப்பட்ட தங்க நகைகளையும் வழங்கினர். ஒரு விதவை, 28 ஆண்டுகளாக கணவரின் நினைவாக வைத்திருந்த தங்கப் பொருளையும் தானமாக வழங்கினார்.

மேலும் படிக்க: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்.. பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் தொலைப்பேசி உரையாடல்..

குழந்தைகளும் தங்களின் சேமிப்பு பணம் மற்றும் ரமலான் பணத்தையும் வழங்கினர். மேலும் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்திற்காக வழங்குவதாக அறிவித்தார்.

அஜிஷ் அகமது ஸ்ரீநகர் பகுதியில் வசிப்பவர், “இந்த போர் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது; உதவுவது நம் கடமை” என தெரிவித்தார்.  இந்தியாவில் இருக்கும் ஈரான் தூதரக வங்கி விவரங்களை பகிர்ந்ததையடுத்து நிதி உதவிகள் அதிகரித்துள்ளன. இந்த நிதிகள் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மனிதாபிமான இந்த செயலை ஈரான் ஒரு போது மறக்காது:

இது தொடர்பாக இந்தியாவில் இருக்கும் ஈரான் தூதரகம், தனது சமூக வலைத்தளத்தில், ” உங்கள் கருணை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு எங்கள் இதயங்களைத் தொட்டது. நீ ஒரு குழந்தையாக இருக்கலாம், ஆனால் உன் இதயம் வானம் போல பரந்தது. மற்றவர்களுக்கு உதவ உன் உண்டியலை உடைத்ததன் மூலம், நீ ஒரு மாபெரும் கருணைச் செயலை வெளிப்படுத்தியுள்ளாய். ஈரான் மக்கள் இந்த அழகான செயலை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். சிறிய கரங்களாலும் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை உலகிற்கு நினைவூட்டியதற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளது. 

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்