9வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Union Budget 2026 - 2027 | ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 01 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.

9வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

01 Feb 2026 09:10 AM

 IST

புதுடெல்லி, பிப்ராவரி 01 : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்ரவரி 01, 2026) 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (Union Budget 2026 – 2027) தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து சாமானிய மக்கள் முதல் பல்வேறு துறைகள் வரை மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 28-ல் தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜனவரி 28, 2026 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 02, 2026 வரை நடைபெற உள்ளது. இதற்கு இடையே வழக்கம் போல பிப்ரவரி 01 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டும் இன்று (பிப்ரவரி 01, 2026) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சரியாக காலை 11 மணி அளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தொடங்க உள்ளார்.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட சாமானியர்கள்!

ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் பங்குச்சந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும். ஆனால் வழக்கப்படி பிப்ரவரி 01 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று வழக்கம் போல பங்குச்சந்தை செயல்பட உள்ளது. இதன்படி சுமார் 27 ஆண்டுகள் கழித்து ஞாயிற்று கிழமையில் நடைபெறும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

சாமியனர்கள் முதல் நிதி நிறுவனங்கள் வரை – எகிறும் எதிர்பார்ப்புகள்

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சாமானியர்களுக்கான சிறந்த பட்ஜெட்டாக அமைந்தது. குறிப்பாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டாம் என்று அரசு கூறியது. இதன் மூலம் ஏராளமான நடுத்தர குடும்பத்தினர் பயன்பெற்று வரும் நிலையில், இந்த ஆண்டும் இத்தகைய சிறப்பு அறிவிப்புகளை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் தலைமை பொறுப்பை ஏற்பார்?
அஜித் பவாரின் விமான விபத்துக்கு முன் விமானி அனுப்பிய குட் மார்னிஹ் மெசேஜ் - நெகிழ்ச்சி சம்பவம்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் - இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி
இந்த ஜப்பானின் கருப்பு முட்டையை சாப்பிட்டால் ஆயுள் 7 ஆண்டுகள் அதிகரிக்குமா?