Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒகே சொன்ன மோடி அரசு.. முக்கியத்துவம் என்ன? பாஜகவின் அரசியல் தந்திரமா இது?

Caste Census: மத்திய அமைச்சரவை தற்போது சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு தற்போது அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது பல அரசியல் கட்சிகள் தரப்பில் வரவேற்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஒகே சொன்ன மோடி அரசு.. முக்கியத்துவம் என்ன? பாஜகவின் அரசியல் தந்திரமா இது?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 01 May 2025 14:22 PM

சாதி வாரி கணக்கெடுப்பு: அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. திமுக அரசு மற்றும் காங்கிரஸ் தரப்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட ஒரு விஷயம் இதுவே ஆகும். அதாவது கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் பாஜகவின் அரசியல் தந்திரம் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்.

சாதி வாரி கணக்கெடுப்பு:

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் எடுக்கப்பட்டது. அதாவது 1881 ஆம் ஆண்டில் தான் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இதைத்தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதிவாரியாக நடத்தப்பட்டது. ஆனால் அது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு அது எடுக்கப்படவில்லை. அதனால் இதற்கு முன்னதாக முழுமையாக சாதிவாரி கணக்கெடுப்பு என்பது 1931 ஆம் ஆண்டில் தான் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் காரணமாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது முறையாக எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

இதன் முக்கியத்துவம் என்ன?

அதாவது 1961 ஆம் ஆண்டு முதல் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதாவது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றால் நமது இந்தியாவின் அத்தியாவசிய தேவைகளாக பார்க்கப்படுவது கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு. இவை சாதி மதம் ஆகியவை அடிப்படையில் கட்டமைப்பின் படி இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதி வாரி கணக்கெடுக்கின்போது இந்த ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அனைவருக்கும் சமமான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வடிவமைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 29 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். அதாவது பெயர், இருப்பிடம், தந்தையின் பெயர். வேலை வாய்ப்பு, பாலினம், வயது, திருமணமான நிலை, தாய்மொழி உள்ளிட்ட தகவல்கள் கேட்பார்கள். பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்டவர்கலின் விவரங்கள் மட்டும் சேர்க்கப்படும். ஆனால் தற்போது மத்திய அரசு அறிவிப்பின்படி வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இடம்பெறும். அதாவது 30 கேள்விகள் இடம் பெறும். அவர்கள் எந்த சாதியய் சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையில் அந்த கேள்வியும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் அரசியல் தந்திரமா?

பல ஆண்டு காலமாக இல்லாத இந்த சாதிவாரி கணக்கெடுப்பு தற்போது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றால் வரவிருக்கும் பீகார் அரசியலில் பாஜக இதனை ஒரு முக்கிய யுத்தியாக பயன்படுத உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி தரப்பிலும், திமுக அரசு தரப்பிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பு மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த கூடும் என பிரதமர் மோடி விமர்சனத்தை முன் வைத்திருந்தார். ஆனால் தற்போது அவரே இந்த சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த முறை அயோதி ராமர் கோயில் யுக்தியை பயன்படுத்தி பாஜக வெற்றி பெருமண கருதியது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் சுமார் 43 தொகுதிகள் எதிர்க்கட்சி கைப்பற்றியது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக மத்தியில் மைனாரிட்டி அரசு அமைந்திருக்கிறது. தற்போது அவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பிகார் அரசியல் தான். பீகார் தேர்தலில் எப்படியாவது பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணம் செய்து வருகிறது. ஆனால் கருத்துக்கணிப்புகளின் படி பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதில் ஓபிசி தலைவர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்துள்ளது பாஜக.

பீகார் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால் அடுத்து வரவிருக்கும் உத்திர பிரதேச தேர்தலிலும் இதனை பாதிக்கும் என கருத்துக்கள் எழுந்து வந்த நிலையில் தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அந்தந்த மாநிலத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டலாம் என பாஜக வியூகம் வகித்துள்ளது. இதன் அடிப்படையில் மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்......
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!...
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?
கலக்கல் நாயகி கயாடு லோஹர் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?...
மே மாதத்தில் வெப்ப அலை நாட்கள் இரட்டிப்பாகும் - IMD எச்சரிக்கை!
மே மாதத்தில் வெப்ப அலை நாட்கள் இரட்டிப்பாகும் - IMD எச்சரிக்கை!...
இணையத்தில் வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!
இணையத்தில் வெளியானது சூரியின் மாமன் பட ட்ரெய்லர்!...
வெளியாகும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?
வெளியாகும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?...
வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!
வேறொரு தருணத்தில்! மதுரை மக்களுக்கு கோரிக்கை வைத்த விஜய்..!...
அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்- சிவகார்த்திகேயன்!
அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்- சிவகார்த்திகேயன்!...
Swiggy Instamart மூலம் டெலிவரி செய்யப்பட்ட தங்கம் - வைரல் வீடியோ!
Swiggy Instamart மூலம் டெலிவரி செய்யப்பட்ட தங்கம் - வைரல் வீடியோ!...