மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள்.. இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்..

Employees Association Strike: அமலுக்கு வந்த புதிய தொழிலாளர்கள் சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அடிப்படை உரிமைகள் பரிக்கப்படும் என்பதன் காரணமாக இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும் என தொழிலாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள்.. இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்..

கோப்பு புகைப்படம்

Published: 

26 Nov 2025 07:34 AM

 IST

நவம்பர் 26, 2025: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அதாவது நவம்பர் 26, 2025 ஆம் தேதியான இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. நாட்​டில் தற்​போது நடை​முறை​யில் உள்ள 29 மத்​திய தொழிலா​ளர் சட்​டங்​களை தொகுத்​து, புதி​தாக 4 புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை அதி​காரப்​பூர்​வ​மாக மத்​திய அரசு நடை​முறைப்​படுத்​தி​யுள்​ளது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு மேற்​கொள்​ளப்​பட்ட மிகப்​பெரிய தொழிலா​ளர் சீர்​திருத்​த​மாக இது பார்க்​கப்​படு​கிறது.

இந்​தப் புதிய சட்ட கட்​டமைப்​பு, பல தசாப்​தங்​களாக பழமை​யான, சிதறி​யுள்ள விதி​களை சுலப​மாக்​குதல், தொழிலா​ளர்​களின் நலனை மேம்​படுத்​துதல், பாது​காப்பு அம்​சங்​களை பலப்​படுத்​துதல், தொழிலா​ளர் நடை​முறை​களை உலகளா​விய சிறந்த முறை​களுக்கு இணை​யாகக் கொண்டு வருதல் ஆகிய​வற்றை முதன்மை இலக்​காக வைத்து கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அடிப்படை உரிமைகள் பரிக்கப்படும்:

இந்நிலையில் இந்த சட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அடிப்படை உரிமைகள் பரிக்கப்படும் என்பதன் காரணமாக இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “ தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுசார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் படிக்க: வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம்.. முன்னாள் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன்!

இது அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல். இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது. ஏற்கெனவே உள்ள 29 தொழிலாளர்நலச்சட்டங்களை நீக்கிவிட்டுபுதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை இயற்றும்போது தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இன்று பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு:

இருந்த போதிலும் இந்த சட்டங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதலாகக் கருதுகிறோம். இதன் காரணமாக பொது வேலை நிறுத்தம் நவம்பர் 26 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும்.

மேலும் படிக்க: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!

கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும்:

தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும். அதோடு, வாயிற்கூட்டம், தெருமுனைக் கூட்டம் என எதிர்ப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்று, இந்த சட்டங்களை எதிர்த்து எல்பிஎப், எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, டியுசிசி, டபிள்யுபிடியுசி, எம்எல்எப்,

எல்டியுசி, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்த கிஷான் மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆகியவை ஆர்ப்பாட்டங் களை நடத்துகின்றன. இதனால் பொது போக்குவரத்து சேவை மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..