Aaryan: போலீசாக விஷ்ணு விஷால்.. ஆர்யன் பட டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Aaryan Movie Teaser Update: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால். இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் ஆர்யன். அதிரடி குற்றம் தில்லார் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஆர்யன் திரைப்படம்
நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தற்போது, தயாரிப்பாளாராகவும் படங்களை தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட படங்கள் உருவாகிவருகிறது. விஷ்ணு விஷால் இறுதியாக ஓஹோ எந்த பேபி (Oho Enthan Baby) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் சகோதரரான ருத்ரா என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக தயாராகிவந்த படம்தான் ஆர்யன் (Aryan).
இப்படத்தை இயக்குநர் பிரவீன் கே (Praveen K) இயக்கியுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இப்படமானது வரும் 2025 அக்டோபர் 31ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்தின் டீசர் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் – பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்
ஆர்யன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
One man.
One case.
Countless secrets.@TheVishnuVishal‘s #Aaryan – TEASER FROM TOMORROW 💥31st October in cinemas – in both Tamil and Telugu.@VVStudioz @adamworx @selvaraghavan @ShraddhaSrinath @Maanasa_chou @GhibranVaibodha @dop_harish @Sanlokesh @silvastunt @PC_stunts… pic.twitter.com/fd9mhTVoOC
— Vishnu Vishal Studioz (@VVStudioz) September 29, 2025
ஆர்யன் திரைப்படத்தின் கதைக்களம்:
விஸ்ணு விஷாலின் இந்த ஆர்யன் திரைப்படத்தில் அவருடன் நடிகர்கள் வாணி கபூர், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் மற்றும் ஜீவா சுப்ரமணியன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படமானது முழுக்க கிரைம் திரில்லர் கதைக்களம் தொடர்பான படமாக உருவாகியுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவரின் ராட்சசன் திரைப்படமானது கிரைம் திரில்லர் போன்ற கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க : பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் நடிகை மடோனா செபாஸ்டியன்
அதை அடுத்ததாக இந்த ஆர்யன் படமும் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், படத்தின் அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.