நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Love Marriage Movie X Review: தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது அப்பா, தாத்தா என தமிழ் சினிமாவில் இவரின் குடும்பம் நட்சத்திர குடும்பமாகவே இருந்து வருகின்றது. தற்போது இவரும் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

லவ் மேரேஜ்

Published: 

26 Jun 2025 16:08 PM

நடிகர் விக்ரம் பிரபு (Actor Vikram Prabhu) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் இறுகப்பற்று. திருமணம் முடிந்த தம்பதிகள் இடையே ஏற்படும் காதல், மோதல் குறித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம் லவ் மேரேஜ். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஷண்முகப் பிரியன் எழுதி இயக்கி உள்ளார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை சுஷ்மிதா பட் (Sushmitha Bhat) நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள் தாஸ், கஜராஜ், முருகானந்தம், வெற்றியாளர் ராமச்சந்திரன், கோடாங்கி வடிவேலு, யாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் சிறப்புத் திரையிடல் சமீபத்தில் நடைப்பெற்றது. அப்போது இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தங்களது கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

லவ் மேரேஜ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

லவ் மேரேஜ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

லவ் மேரேஜ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

லவ் மேரேஜ் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படம் திருமணத்திற்காக பெண் தேடும் இளைஞரையும் அவரது குடும்பத்தையும் சுற்றி நடக்கும் கதையாகும். இறுதியில் அவருக்கு எப்படி திருமணம் நடந்தது அதற்கு இடையில் என்ன என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை ஆகும்.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!