Thalaivan Thalaivii : விஜய் சேதுபதி – நித்யா மேனனின் ‘தலைவன் தலைவி’ பட இசை வெளியீட்டு விழா எப்போது? அறிவிப்பு இதோ!
Thalaivan Thalaivii Movie Audio Launch Update : நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2025 ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைவன் தலைவி திரைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாண்டிராஜ் (Pandiraaj). இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் (Etharkkum thunindhavan) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடிப்பில் அவர் இயக்கியுள்ள படம் தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படமானது விஜய் சேதுபதியின் 52வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பல வருடங்களுக்குப் பின் கிராமத்து கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்துள்ளார். மேலும் இப்படத்துக்குப் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santosh Narayanan) இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
படமானது இறுதிக்கட்ட பணியில் உள்ள நிலையில், வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வரும் 2025, ஜூலை 12ம் தேதியில், சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது
திங்க் மியூசிக் வெளியிட்ட தலைவன் தலைவி பட இசை வெளியீட்டு விழா அறிவிப்பு :
The stage is set. The love is loud.🥁🤍#ThalaivanThalaivii Audio Launch – July 12th, 6PM | Chennai Trade Centre 💥@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu @Music_Santhosh @SathyaJyothi @thinkmusicindia @mynnasukumar @PradeepERagav @gopiprasannaa @onlynikil… pic.twitter.com/2qZECDzZgN
— Think Music (@thinkmusicindia) July 9, 2025
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி நடிகர்கள் :
இப்படத்தில் விஜய் சேதுபதி ஆகாசவீரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நித்யா மேனனும் பேரரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் யோகி பாபு, செம்பன் வினோத், சரவணன், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, தீபா சங்கர் மற்றும் ரோஷினி ஹரிப்ரியன் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க :வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – முதல் பாடல் வெளியீடு!
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. அதை அடுத்ததாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வரும் 2025, ஜூலை 12ம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க :தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
தலைவன் தலைவி பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :
இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரும் வரும் 2025, ஜூலை 16ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு இப்படமானது நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என ரசிர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.