Maargan : உலகையே முழுவதும் வெறுக்கிறேன்.. விஜய் ஆண்டனியின் மார்கன் படத்திலிருந்து வெளியான தீம் பாடல்!
Maargan Movie Ulagaye Muzhuvathum Verukkiren Song : கோலிவுட் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் மார்கன். தற்போது இப்படத்திலிருந்து உலகையே முழுவதும் வெறுக்கிறேன் என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் (Vijay Antony) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஹிட்லர் (Hitler). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் தனா (Dhana) இயக்கியிருந்தார். இந்தப் படமானது முற்றிலும் திரில்லர் கதைக்களத்துடன் வெளியாகி இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் மார்கன் (Maargan) . இந்த படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul) இயக்கியுள்ளார். இவர் தமிழில் ஏற்கனவே பல படங்களில் இணைய இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம்தான் மார்கன். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்திற்குத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து “உலகையே முழுவதும் வெறுக்கிறேன்” என்ற தீம் பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.




நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட மார்கன் பட தீம் பாடல் :
Ulagaye Muzhuvathum Verukkiren 🌑 The Soul of #Maargan https://t.co/v7dUjGvzGa – Tamil ⚪️https://t.co/2K1k3dlfyR – Telugu ⚪️#maarganfromjune27
6 days to go♦️@leojohnpaultw @AJDhishan990 @mrsvijayantony @vijayantonyfilm @SureshProdns @SpiritMediaIN ♦️ pic.twitter.com/xSlaXUXiFT
— vijayantony (@vijayantony) June 21, 2025
மார்கன் படத்தின் கதைக்களம் :
விஜய் ஆண்டனி முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மேலும் முக்கிய வேடத்தில் அஜய் தேஷன் என்ற நடிகர் நடித்திருக்கிறார். இவர் வேறு யாருமில்லை விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன்தான். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆண்டனி அவரை நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மார்கன் படமானது ஒரு ஆமையை மையமாகக் கொண்டு உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படமானது முழுவதும் க்ரைம் திரில்லர் படமாகவே இருக்கிறது. மார்கன் படமானது முழுக்க விறுவிறுப்பான படமாகத்தான் அமைந்திருகிறது. இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனியும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் :
நடிகர் விஜய் ஆண்டனி இந்த மார்கன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 5 படங்களைத் தனது கைவசத்தில் வைத்துள்ளார். வள்ளி மயில், அக்கினி சிறகுகள், காக்கி, லாயர், சக்தி திருமகன் என அடுத்தடுத்த படங்களைத் தனது கைவசத்தில் வைத்திருக்கிறார். இதில் லாயர் படத்தை அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கிவருகிறார். இப்படத்தின் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில்தான் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் விஜய் ஆண்டனியே தயாரித்து வரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.