Maargan : திரையரங்கில் பெரும் வரவேற்பு.. விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ பட வசூல் எவ்வளவு தெரியுமா?

Maargan Movie Box Office Collection : நடிகர் விஜய் ஆண்டனியின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் மார்கன். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது 3 நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தது பார்க்கலாம்.

Maargan : திரையரங்கில் பெரும் வரவேற்பு.. விஜய் ஆண்டனியின் மார்கன் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி மார்கன் திரைப்படம்

Published: 

30 Jun 2025 17:56 PM

 IST

இயக்குநர் லியோ ஜான் பால் (Leo John Paul)  இயக்கத்தில் வெளியான சைக்கோ திரில்லர் திரைப்படம்தான் மார்கன் (Maargan). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony)  நடித்துள்ளார். இந்த மார்கன் படமானது கடந்த 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லியோ ஜான் பால் இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்து மற்றும் இசையமைத்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஜய் ஆண்டனி துருவ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக, விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் தேஷன் (Ajay Deshan)  நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரைம் திரில்லர் திரைப்படமாக இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இப்படம் வெளியாகி 3 நாட்கள் கடந்த நிலையில், மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. இப்படமானது 3 நாட்களைக் கடந்த நிலையில், இதுவரை சுமார் ரூ. 3 கோடியை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் ஆண்டனி வெளியிட்ட மார்கன் படப் பதிவு :

மார்கன் படம் எப்படி இருக்கு?

இந்த மார்கன் படமானது முற்றிலும் சைக்கோ திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இந்த இடத்தில் வில்லன் தமிழறிவு (அஜய் தேஷன்) பெண்களை மர்ம மருந்தைக் கொண்டு தாக்கி கொலை செய்கிறார். இதில் நடிகர் விஜய் ஆண்டனியும் அந்த மருந்தினால் பாதிக்கப்படுகிறார். அவர் எவ்வாறு அந்த வில்லனைத் தனது இன்வெஸ்டிகேஷன் மூலம் பிடித்து, அவரை எவ்வாறு தடுக்கிறார் என்பதுதான் இப்படத்தில் முக்கிய கதையாகும். மேலும் இப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களும், உங்களைத் திரையரங்க இருக்கையின் நுனியில் அமரவைக்கும். மேலும் இயக்குநர் லியோ ஜான் பாலின் இயக்கமும், எழுத்தும் இப்படத்தில் முக்கியமான பங்காற்றியுள்ளது என்று கூறலாம்.

விஜய் ஆண்டனியின் புதிய படங்கள் பட்டியல்

விஜய் ஆண்டனி மார்கன் படத்தைத் தனது கைவசத்தில் சுமார் 6 படங்கள் வீதம் வைத்துள்ளார். குறிப்பாக வள்ளி மயில், அக்கினி சிறகுகள், காக்கி, சக்தி திருமகன் மற்றும் லாயர் போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இப்படத்தைத் தொடர்ந்து தனது இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் பிச்சைகாரன் 3 படத்தையும் உருவாக்கவுள்ளாராம். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என விஜய் ஆண்டனியும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..