ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம்

Janaki v/s State Of Kerala: நடிகர் சுரேஷ் கோபி நாயகனாகவும் நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியாகவும் நடித்து உள்ள படம் ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்தப் படத்தின் கதையைப் பார்த்த சென்சார் போர்ட் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு படக்குழு தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளது,

ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் பெயரை மாற்ற படக்குழு சம்மதம்

ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா

Updated On: 

09 Jul 2025 21:01 PM

நடிகர் சுரேஷ் கோபி (Actor Suresh Gopi) நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்தப் படத்தை இயக்குநர் பிரவின் நாராயணன் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாதவ் சுரேஷ், ஸ்ருதி ராமச்சந்திரன், திவ்யா பிள்ளை, அஸ்கர் அலி, பைஜு சந்தோஷ், ஷோபி திலகன், ஜெயன் சேர்த்தலா, கோட்டயம் ரமேஷ், ஜாய் மேத்யூ, ஜோஸ் ஷோனாத்ரி, டினி டேனியல், பாலாஜி சர்மா, நிஷ்தர் சைட், யது கிருஷ்ணன், திலீப் மேனன், ஷபீர் கான், மஞ்சுஸ்ரீ என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இந்த ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பி வைத்து இருந்தது. அங்கு படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கும் நாயகிக்கும் ஜானகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை படக்குழு மாற்ற வேண்டும் என்று வாய்மொழி வார்த்தையாக தெரிவித்து இருந்தது. அதற்கு காரணம் இந்தப் படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரன் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தில் நடிகை அனுபமா பரமேசுவரனின் பெயர் ஜானகி என்று வைக்கப்பட்டுள்ளது.

Also read… தமிழ் சினிமா நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது – இயக்குநர் பிரேம் குமார்

சீதையின் மற்றொரு பெயர் ஜானகி:

சீதையின் மற்றொரு பெயர் ஜானகி என்றும் இந்த மாதிரி பாலியல் வன்கொடுகைக்கு ஆளான பெண்ணிற்கும் அதுகுறித்த படத்திற்கும் இந்த பெயரை வைக்க வேண்டாம் என்று தணிக்கை குழு அறிவுறித்தியது. இதுகுறித்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது நீதிபதிகள் ஜானகி என்ற பெயருக்கு என்ன குழப்பம் என்றும் இவ்வாறான நிகழ்வுகள் நடந்துகொண்டு தானே இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.

கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் இருக்கும் இந்த நிலையில் படத்தின் பெயரான ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா என்பதை மாற்ற படக்குழு தற்போது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த செய்திகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதுகுறித்து பேசிய இயக்குநர் பிரவின் நாராயணம் ஒரு படத்தில் ஏற்படும் மாற்றம் படக்குழுவிற்கு மகிழ்ச்சியை அளிக்காது. ஆனால் அந்த மாற்றத்தால் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Also read… நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் படத்தின் ரிலீஸ் தேதி இதோ

ஜானகி v/s ஸ்டேட் ஆஃப் கேரளா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: