Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்… திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

Jana Nayagan Audio Launch: தமிழ் சினிமாவில் உச்சமாக இருந்துவருபவர்தான் தளபதி விஜய். இவரின் கடைசி திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மலேசியாவிற்கு மாஸ் எண்டரி கொடுத்த தளபதி விஜயின் வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துவருகிறது.

Jana Nayagan: ஜன நாயகன் ஆடியோ ரிலீஸ்... திருவிழா கொண்டாட்டத்தில் மலேசியா.. விஜய் மாஸ் எண்ட்ரி!

தளபதி விஜய்

Published: 

27 Dec 2025 12:07 PM

 IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் (H. Vinoth) இப்படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணி இப்படத்தின் மூலம் முதலும் கடைசியுமாக இணைந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மமிதா பைஜூ (Mamitha Baiju), நரேன், பாபிதியோல், பிரியாமணி, டீஜெய் அருணாச்சலம் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 3 பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, “தளபதி திருவிழா” (Thalapathy Thiruvizha) என்ற பெயரில் இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இதற்காக நேற்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தளபதி விஜய் புறப்பட்டிருந்தார். இந்நிலையில் மலேசிய (Malaysia) சென்ற அவருக்கு, ரசிகர்களின் மேளதாளக் கொண்டாட்டங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தது.. அதை அடுத்த படங்களில் தவிர்க்க முயற்சி செய்கிறேன்- லோகேஷ் கனகராஜ் பேச்சு!

தளபதி விஜய்யின் மலேசிய வரவேற்பு தொடர்பான வீடியோ பதிவு :

தளபதி விஜய் மற்றும் ஜன நாயகன் படக்குழு அனைவரும் தனி விமானத்தின் மூலமாக மலேசியாவிற்கு சென்றிருந்தனர். மலேசிய இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் ஜன நாயகன் படக்குழு என பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் தளபதி விஜய்க்கு இசைவெளியீட்டு விழாவில் இருக்கும் மாஸ் எண்டரி தொடர்பான வீடியோ இணையத்தில் வரவேற்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!

இந்த இசை வெளியீட்டு விழா தளபதி விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா என்ற நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் இருந்துவருகிறது. இன்று 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் நடக்கும் இந்த இசைவெளியீட்டு விழா, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த இசைவெளியீட்டு விழாவில் நடக்கும் கொண்டாட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Related Stories
Thalapathy Thiruvizha: ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா – அரங்கத்திற்கு வந்த தளபதி விஜய் – பூஜா ஹெக்டே…!
அதிரடி ஆரம்பம்.. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா – மேளதாள கொண்டாட்டத்தில் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தில் இணைந்த அசுரன் பட நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பதிவு!
Lokesh Kanagaraj: கூலி படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தது.. அதை அடுத்த படங்களில் தவிர்க்க முயற்சி செய்கிறேன்- லோகேஷ் கனகராஜ் பேச்சு!
Eko Movie: முழுவதும் திரில்லர்.. சந்தீப் பிரதீப்பின் எக்கோ படத்தை எந்த ஓடிடியில்.. எப்போது பார்க்கலாம்?
2025-ல் வசூலில் மாஸ் காட்டிய அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்த்!
சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?