Parasakthi: ரத்னமாலா..ரத்னமாலா..! வெளியானது சிவகார்த்திகேயனின் பராசக்தி பட செகண்ட் சிங்கிள்..!
Parasakthi Ratnamala Song: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பராசக்தி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில், இவரின் 100வது படமாகும். இந்நிலையில் இப்படத்திலிருந்து இவரின் குரலில் உருவான ரத்னமாலா லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

பராசக்தி பட செகண்ட் சிங்கிள்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவர் முன்பு இயக்குநர் மணிரத்னத்திடம் (Mani Ratnam) உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நாயகனாக நடிக்க, நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை ஸ்ரீலீலாவிற்கு இதுதான் தமிழில் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 1960ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமாரின் (GV. Prakash Kumar) குரலில் வெளியான “ரத்னமாலா” (Ratnamala) என்ற இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதையும் படிங்க: தேரே இஷ்க் மே படம் என்னை மிகவும் பாதித்தது… நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த விஷயம்!
பராசக்தி பட ரத்னமாலா பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Where melody meets magic. A song that is sure to take your breath away ❤️#Ratnamala – Second single from #Parasakthi out now. A @gvprakash musical#ParasakthiFromPongal#ParasakthiFromJan14
Tamil▶️ – https://t.co/ZHWwrbGp5V
Telugu▶️ – https://t.co/EZxGOkL77d@siva_kartikeyan… pic.twitter.com/5GFgwV7fZi— DawnPictures (@DawnPicturesOff) November 25, 2025
பராசக்தி பட ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் எப்போது :
இந்த பராசக்தி படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் அதர்வா இப்படத்தில் மியாட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிரபல நடிகர்கள் ராணா மற்றும் பேசில் ஜோசப் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். இந்த் படமானது வரும் 2026ம் ஆனது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவும் நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்த வெளியாகிவரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்ச் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நிறைவடைந்தது கருப்பு படத்தின் ஷூட்டிங்… ரிலீஸ் எப்போது தெரியுமா?
இப்படம் ஜனவரி 14ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் 2026 ஜனவரி 7 அல்லது 10ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படமானது ஜன நாயகன் படத்துடன் மோதும் நிலையில், வசூல் பாதிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.