தளபதி விஜய்யின் மதுரை மாநாட்டின் டிவி நேரலையில் ‘மதராஸி’ பட விளம்பரம்.. என்ன காரணம்?

TVK Madurai Conference : தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் தளபதி விஜய். மதுரையில் இன்று 2025, ஆகஸ்ட் 21ம் தேதியில், இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றிருந்தது. இந்த மாநாடு நேரலையாக ஒளிபரப்பப்பட்ட சேனல்களில், நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி பட விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தளபதி விஜய்யின் மதுரை மாநாட்டின் டிவி நேரலையில் மதராஸி பட விளம்பரம்.. என்ன காரணம்?

தளபதி விஜய் மற்றும் மதராஸி படம்

Published: 

21 Aug 2025 19:01 PM

 IST

தளபதி விஜய் (Thalapathi Vijay) தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, இன்று 2025, ஆகஸ்ட் 21ம் தேதியில் மதுரையில் (Madurai) இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தியுள்ளார். இந்த மாநாட்டில் தளபதி விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கு மேல் தொண்டர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2வது மாநில மாநாட்டில் தளபதி விஜய் ஆற்றிய உரை ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், 2026ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறுவோம் என அவர் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த மதுரை மாநாட்டின் நேரலையில் போது, தனியார் செய்தி சேனல்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madharaasi) படத்தின் குறித்தான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த தகவலானது தளபதி ரசிகர்களிடம் பேசும் பொருளாக மாறியுள்ளது. ஒரு தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல், தொடர்ந்து பல தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் அதே விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர் அடுத்த தளபதியா? இல்லை படத்தின் விளம்பர நோக்கமா? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி வருகிறது.

இதையும் படிங்க : மு.க.ஸ்டாலின் அங்கிள்… பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா?… – முதல்வர் மீது விஜய் கடும் விமர்சனம்

மதுரை மாநாட்டின் நேரலையில் மதராஸி படத்தின் விளம்பரம் ;

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில், உருவாகியிருக்கும் படம் மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிட்டத்தட்டத் துப்பாக்கி மற்றும் கஜினி படத்தின் கலவையாக இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலிஸ் தேதிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : மதுரை தவெக மாநாட்டில் நடிகர் அஜித்தின் கட் அவுட்- வைரலாகும் போட்டோ

இணையத்தில் வைரலாகும் அந்த பதிவு :

இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 21ம் தேதியில்ல் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் நேரலையின்போது, இப்படத்தின் விளம்பரம் செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இது மதராஸி படத்தின் வியாபார நோக்கமா ? அல்லது சிவகார்த்திகேயன்தான் சினிமாவில் அடுத்த தளபதியா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர். தற்போது இது தளபதி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!