Sasikumar: கல்லூரிகளில் எனது படங்களை ஒருபோதும் புரோமோஷன் செய்யமாட்டேன் – சசிகுமார் பேச்சு!

Sasikumar About College Promotions: கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருப்பவர் சசிகுமார். இவரின் நடிப்பில் மை லார்ட் என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அந்த விதத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், கல்லூரிகளில் படம் புரோமோஷன் செய்வது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

Sasikumar: கல்லூரிகளில் எனது படங்களை ஒருபோதும் புரோமோஷன் செய்யமாட்டேன் - சசிகுமார் பேச்சு!

சசிகுமார்

Updated On: 

10 Feb 2026 12:38 PM

 IST

நடிகர் சசிகுமார் (Sasikumar) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக நுழைந்து, பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவந்தார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் வரும் 202 பிப்ரவரி 13ம் தேதியில் ரிலீஸிற்கு தயாராகியுள்ளாள் படம்தான் மை லார்ட் (My Lord). இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்க, ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கார் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சசிகுமார் லீட் கதாநாயகனாக நடிக்க, கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் (Chaitra J Achar) கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சசிகுமார் கல்லூரியில் தனது படங்களை புரோமோஷன் செய்யாதது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘இது தியேட்டர் கிடையாதுங்க ப்ளீஸ்’.. ரசிகரிடம் கோபப்பட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

கல்லூரிகளில் தனது படங்களை புரோமோஷன் செய்யாத காரணம் குறித்து சசிகுமார்:

அந்த நேர்காணலில் பேசிய சசிகுமார், “கல்லூரிகளில் படங்களை ப்ரோமோஷன் செய்வது டிக்கெட்டுகளாக மாறும் என நான் நினைக்கவில்லை. கல்லூரிகளில் மாணவர்கள் பிரபலங்கள் வருவதை ரசிப்பார்கள், அதை ஒரு தருணமாக எடுத்துக்கொண்டு அவர்கள் முன்னேறிச் செல்வார்கள். அதனால் படிப்பு தொடர்பான விஷயங்களை மட்டுமே அங்கு காட்சிப்படுத்த வேண்டும். சினிமாவை அல்ல.

இதையும் படிங்க: ஓடிடியில் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம்.. அப்படி என்ன செய்தது தெரியுமா?

நல்ல ப்ரோமோஷன் மற்றும் பிரபல நடிகை நடித்திருந்தால் நிச்சயம் அதை பார்ப்பார்கள். தயாரிப்பாளர்கள் என்னை கட்டாயப்படுத்தினால் மட்டுமே தவிர, கல்லூரிகளில் எனது படங்களை ஒருபோதும் ப்ரோமோஷன் செய்யமாட்டேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மை லார்ட் திரைப்படம் குறித்து நடிகர் சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த மை லார்ட் படத்தில் சசிகுமார் இதுவரை நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் காதல், எமோஷனல் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படமானது வரும் 2026 பிப்ரவரி 13ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இதை ட்ரெய்லர் தற்போதும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படமானது டூரிட்ஸ் பேமிலி படத்தைப் போலவே சசிகுமாருக்கு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..