Freedom : சசிகுமார் – லிஜோமோல் ஜோஸின் ‘ஃப்ரீடம்’ பட இரண்டாவது பாடல் இதோ!
Freedom Movie Second Single : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருவார் சசிகுமார். இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ப்ரீடம். இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ஆரிரோ ஆராரிரோ என்ற லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமாரின் (Sasikumar) நடிப்பில் இதுவரை தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. இந்நிலையில், அவன் நடிப்பில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். சுமார் ரூ 8 கோடி பொருட்செலவில் வெளியான இப்படமானது உலக அளவில் சுமார் ரூ. 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதில் சசிகுமாருடன் நடிகை சிம்ரனும் (Simran) இணைந்து நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2025, மே 1 ஆம் தேதியில் வெளியாகியிருந்தது. இதில் சசிகுமார் இலங்கைத் தமிழராக நடித்திருந்தார். இப்படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் இலங்கை வாசியாக அவர் நடித்திருக்கும் படம்தான் ப்ரீடம் (Freedom).
இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா (Sathyasiva) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்திலிருந்து 2வது பாடலான “ஆரிரோ ஆராரிரோ” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை புகழ் பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




சசிகுமார் வெளியிட்ட ஃப்ரீடம் பட இரண்டாவது பாடல் பதிவு :
#Freedom second single #VaikomVijayalakshmi https://t.co/z1O1yZMWgo#FreedomFromJuly10
Music @GhibranVaibodha
Directed by @Sathyasivadir
Produced by @vijayganapathys @PandiyanParasu@thesudevnair @DirectorBose @MalavikaBJP @nsuthay @Arunbharathi_A @KavingarSnekan pic.twitter.com/l4rYUIXgDS
— M.Sasikumar (@SasikumarDir) June 30, 2025
சசிகுமாரின் ஃப்ரீடம் திரைப்படம் :
டூரிஸ்ட் பேமிலி படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஃப்ரீடம். இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கழுகு மற்றும் சிவப்பு போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களைத் தொடர்ந்துதான் சசிகுமாருடன் ஃப்ரீடம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படமும் டூரிஸ்ட் பேமிலி படத்தைப் போல, இலங்கைத் தமிழர்கள் குடும்பத்தை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தை விஜய கணபதி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த ப்ரீடம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து, இவரின் இசையமைப்பில் முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து தற்போது 2வது பாடலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ப்ரீடம் படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக உருவாகியுள்ளதாம். மேலும் இப்படமானது வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் டூட்டிஸ்ட் பேமிலி திரைப்படத்தைப் போல, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.