Samuthirakani: சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடிய அரசன் படக்குழு!
Samuthirakanis Birthday Celebration: தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக நுழைந்து, தற்போது நடிகராக பாடங்களில் நடித்துவருபவர் சமுத்திரக்கனி. இவர் இன்று (26/04/2026) தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டதை வருகிறார். அந்த வகையில் இவரின் பிறந்தநாளை, சிலம்பரசனின் அரசன் படக்குழு சிறப்பாக கொண்டாடியுள்ளது.

சமுத்திரக்கனி பிறந்தநாள் கொண்டாட்டம்
சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்க, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். இந்த அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங்கானது கடந்த 2025ம் ஆண்டு இறுதி முதல் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சிலம்பரசன், சமுத்திரக்கனி (Samuthirakani), யோகி பாபு (Yogi babu), ஆண்ட்ரியா (Andrea), அமீர் (Ameer) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த அரசன் திரைப்படமானது வட சென்னை (Vada Chennai) படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 26ம் தேதியில், நடிகர் சமுத்திரக்கனி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இவரின் பிறந்தநாளை, சிலம்பரசனின் அரசன் படக்குழு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை – வாரணாசி படம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!
சமுத்திரக்கனியின் பிறந்தநாளை கொண்டாடிய அரசன் படக்குழு தொடர்பான பதிவு:
#Arasan 👑 – #Samuthirakani celebrated his birthday with #STR, #Andrea, #YogiBabu, and #Pawan.#VadaChennai young Guna, Chandra, Velu, Sankar portions are being filmed with #SilambarasanTR (Arasan) 👀🔥🔥 pic.twitter.com/UDl80Al9N3
— Movies Singapore (@MoviesSingapore) April 26, 2026
சமுத்திகராகினி தனது 53வது பிறந்தநாளை கொண்டைவரும் நிலையில், அவரின் பிறந்தநாளை அரசன் படக்குழு செல்லப்பிரேட் செய்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன், யோகி பாபு, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ஆண்ட்ரியா மற்றும் சமுத்திரக்கனியின் குடும்பத்தினர் என பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த புகைப்படங்களானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தனது இயக்கத்தில் எப்போது படம் உருவாகும்? – ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன விளக்கம்!
இந்த அரசன் திரைப்படமானது வட சென்னை படத்தின் பின்னணி கதையில் தயாராகிவரும் நிலையில், வெற்றிமாறனின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் சிலம்பரசன் அரசன் என்ற வேடத்தில் நடிக்கும் நிலையில், அவருடன் வடசென்னை படத்தில் நடித்த பல பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இப்படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது. இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.