Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna : ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா மந்தனா.. புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

Rashmika Mandanna New Movie Title Update : நயன்தாரா , த்ரிஷாவை போல முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அவர்களைப் போலவே தனது கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக அவர் நடிக்கவுள்ள புதிய படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Rashmika Mandanna : ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா மந்தனா.. புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு!
ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 27 Jun 2025 16:59 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்த படங்களில் சில  1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் இவரை லக்கி சார்ம் என்று திரைப்பட ரசிகர்கள் கூறிவருகின்றனர். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa) . இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்த்தில், தனுஷிற்கு (Dhanush) ஜோடியாக சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான இப்படமானது பான் இந்திய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாக திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு மொழியை அடிப்படியாக கொண்டு, இயக்குநர் ராவீந்திர புல்லே (Rawindra pulle) இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பை ராஷ்மிகா சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

அதை தொடர்ந்து இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழு ‘மைசா‘ (MYSAA) என்ற டைட்டிலை வைத்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா அதிரடி ஆக்ஷ்ன் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மந்தனாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு :

மைசா திரைப்படம் :

இந்த திரைப்படத்தில் நயன்தாராவைப் போல, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்வு செய்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.  அந்த வகையில் இந்த மைசா படத்தில் ராஷ்மிகா மந்தனா, அதிரடி ஆக்ஷ்ன் ரோலில் நடித்துவருகிறாராம். இப்படமானது வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகிவருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா இறுதியாக இந்தியில் சாவா என்ற வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் விக்கி கௌஷல் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், இது சத்ரபதி சிவாஜி கதையை அடிப்படியாக கொண்டு உருவாகியிருந்தது.

அதை போல இந்த மைசா படமும் வரலாற்று படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ராவீந்திர புல்லே இயக்க, யு.என் பார்முலா பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது.

ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகும் படங்கள் :

நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில், தி கேர்ள் பிரென்ட் என்ற படத்தில் நடித்துவந்தார். இப்படத்தை நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்தியில் தமா மற்றும் காக்டைல் 2 போன்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்துதான் இந்த மைசா படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.