Pradeep Ranganathan: என் அடுத்த படம் ‘லவ் டுடே 2’? பிரதீப் ரங்கநாதன் விளக்கம்!
Love Today Sequel Update: பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் வரும் 2025 தீபாவளிக்கு டியூட் என்ற படமானது வெளியாகவுள்ளது. இந்த நிலையில் டியூட் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இவர், லவ் டுடே 2 படம் எடுப்பது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.

லவ் டுடே 2
நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) முன்னணி நடிப்பில் இறுதியாக டிராகன் (Dragon) என்ற படமானது வெளியானது. கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான இப்படம், சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் புதியதாக வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் சரத்குமார் மற்றும் ரோகினி என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சாய் அபயங்கர் மற்றும் சரத்குமார் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதனிடம் லவ் டுடே 2 (Love today 2) திரைப்படம் எடுக்கவுள்ளீர்களா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பிரதீப் ரங்கநாதனுக்கு தக்க பதிலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டியூட் பட டைட்டிலுக்கு காரணம் .. இயக்குநர் கீர்த்திஸ்வரன் சொன்ன சீக்ரெட்!
லவ் டுடே 2 திரைப்படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் சொன்ன விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “ஆமாம், கண்டிப்பாக லவ் டுடே 2 படத்திற்கு கதை இருக்கிறது. நானும் அந்த யோசனையைப் பற்றி யோசித்தேன். ஆனால் இந்த படமானது விரைவில் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். லவ் டுடே 2 திரைப்படத்தை எடுப்பதற்கு முன் வேறு எதாவது சிறப்பாக படத்தை எடுப்பதற்கு விரும்புகிறேன். மேலும் தற்போது நான் முழுவதுமாக திரைப்படங்ககளில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஓபனாக பேசியுள்ளார்.
டியூட் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து பிரதீப் ரங்கநாதன்
இந்த டியூட் படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 3 மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் இன்னும் உச்சத்தில் இருக்க காரணம் அதுதான்- ரஜினிகாந்த் குறித்துப் பேசிய துருவ் விக்ரம்!
மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.