சினிமா என்பது ஒரு கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் பேச்சு!
Director Ram: தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படம் குறித்து பிரபலங்களும் ரசிகரக்ளும் தொடர்ந்து தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் சினிமா குறித்து இயக்குநர் ராம் பேசியது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் சிவா நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி இந்தப் படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, அஜு வர்கீஸ், பாலாஜி சக்திவேல், விஜய் ஏசுதாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். அப்பா மற்றும் மகன் இடையே இருக்கும் உறவு குறித்தும் தற்போது சமூகத்தில் நிலவும் சில பெற்றோர்களின் சிக்கல் குறித்தும் அவர்களின் குழந்தை வளர்ப்பு குறித்தும் இந்தப் படம் பேசியிருந்தது.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் படத்தின் வெற்றி விழா படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் சினிமா குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் இயக்குநர் ராம் பேசியதாவது முதலில் இந்தப் படம் வெற்றியடையுமா இல்லையா என்பதே கேள்விகுறியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்காக நடிகர் சிவா தயாரிப்பாளரை அழைத்து வந்த போது அவரிடம் படம் வெற்றிபெறுமா இல்லையா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றுதான் தெரிவித்தேன். ஏன் என்றால் சினிமா எப்போதும் ஒரு கணிக்க முடியாத விளையாட்டு என்று தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே தற்போது கவனம் பெற்று வருகின்றது.
Also read… தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
பறந்து போ படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#DirectorRam‘s #ParanthuPo Now Running Successfully🌙🌻
Check #UK Cinema List. Book Your tickets Now.https://t.co/XHl4KJnWo3https://t.co/RIuaD7fqFx#Shiva @iamvijayyesudas @DhayaSandy @eka_dop @edit_mathi @silvastunt @madhankarky @mynameisraahul @Romeopictures_… pic.twitter.com/aCLzl2wdNp— Ayngaran International (@Ayngaran_offl) July 5, 2025
பறந்து போ படத்தின் கதை என்ன?
இந்த மெட்ரோ சிட்டியில் தனியாக குழந்தையை வளர்க்கும் இளம் பெற்றோர்களின் வாழ்க்கை தான் இந்தப் படம். அந்த குழந்தையிடம் பெஸ்ட் பேரண்ட்ஸ் என்று பெயரை வாங்குவதற்காக அவர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதுதான். அப்படி இருக்கும் சூழலில் அந்த பையனுடன் தந்தை ஒரு ரோட் ட்ரிப் செல்ல நேர்கிறது. அப்போது அந்த குழந்தையின் ஆசைகள் என்ன என்பது குறித்து பெற்றோர்கள் புரிந்துகொள்கின்றனர். இப்படி வெளியான படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.