Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Happy Birthday Ajithkumar: ‘தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் தனது படத்தில் கூறும் ‘என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா' வசனத்தைப் போல சினிமாவில் தற்போது அவர் உள்ள இடத்திற்கு அவரது உழைப்பு மட்டுமே முழுக்க முழுக்க காரணமாக உள்ளது.

Happy Birthday Ajithkumar: ‘தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
அஜித் குமார்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 May 2025 07:43 AM

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார் (Actor Ajith Kumar). இவர் மே மாதம் 1-ம் தேதி 1971-ம் ஆண்டு பிறந்தார். இந்த 2025-ம் ஆண்டின் தொடக்கமே நடிகர் அஜித் குமாருக்கு வெற்றிகரமாக தொடங்கியது என்றே கூறலாம். ஆம் ஜனவரி மாதாத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் (Padma Bhushan Award) விருது இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு நடிகர் அஜித் குமாருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான போது அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியது.

நடிகர் அஜித் குமாரின் சினிமா அறிமுகம்:

கடந்த 1990-ம் ஆண்டு இயக்குநர் செண்பக ராமன் இயக்கத்தில் நடிகர்கள் சுரேஷ் மற்றும் நதியா நடித்தப் படம் என் வீடு என் கணவர். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழி சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 1993-ம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் அஜித் குமார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகை சங்கவி நாயகியாக நடித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் ஹிட் படங்கள்:

அதனைத் தொடர்ந்து தமிழில் வரிசையாக படங்களை நடிக்கத் தொடங்கினார் நடிகர் அஜித் குமார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன், வாலி, அமர்களம், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ரெட், வில்லன், அட்டகாசம், திருப்பதி, வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா என்று அஜித் ஹிட் படங்களை வரிசைக் கட்டிக்கொண்டே போகலாம். அத்தனை நிறைய ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் நடிகர் அஜித்.

இயக்குநர்களின் ஆதர்சன நாயகன் அஜித்:

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களாக இருக்கும் பலருக்கு நடிகர் அஜித் குமார் முதல் வாய்ப்பை கொடுத்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஆம் தற்போது நாம் கொண்டாடும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் நடிகர் அஜித் தான். தீனா படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

அதே போல வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரகாக அறிமுகம் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. தற்போது இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த வாழ்க்கைக்கு நடிகர் அஜித் தான் காரணம் என்று எஸ்.ஜே.சூர்யா பல விருது வழங்கு விழா மற்றும் பேட்டிகளிலும் அடிக்கடி பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கார் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித்:

நடிகர் அஜித் குமாருக்கு நடிப்பு எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு ரேஸிங்கும் பிடிக்கும். அந்த வகையில் அவர் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே இந்தியாவிற்கு கார் ரேஸில் பல பதக்கங்களையும், பெருமையையும் தொடர்ந்து பெற்றுத்தந்தார். குறிப்பாக துபாயில் நடைப்பெற்ற கார் பந்தையத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அஜித்தின் குழு ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம்.

காதல் திருமணம் டூ ஹேப்பி ஃபேமிலி:

இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 25-வது படமாக வெளியானது அமர்களம். இந்தப் படத்தில் நடிகையும் தற்போது அஜித்தின் மனவியாக உள்ள நடிகை ஷாலினிதான் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதே நடிகர் அஜித் குமாருக்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டதாக இயக்குநர் சரண் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து படப்பிடிப்பில் ஒரு காட்சியில் தவறுதலாக அஜித் ஷாலினியின் கையை வெட்டிவிட்டார். அப்போது அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அக்கரையாக பார்த்துக்கொண்டது நடிகை ஷாலினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதனைத் தொடர்ந்து அவரும் அஜித்தை காதலிக்க தொடங்கிவிட்டார்.

இதன் பிறகு இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. அதன் பிறகு சினிமாவிற்கு முழுவதும் ப்ரேக் கொடுத்துவிட்டு தற்போது முழுவதுமாக ஹவுஸ் வொய்ப்பாக உள்ளார் ஷாலினி.

ஷாலினி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:

இந்த தம்பதிகளுக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் அஜித் குமார் – ஷாலினி தம்பதி தங்களது 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்த ஆத்ர்சன தம்பதிகளுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அஜித் குமார் தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு குடும்பத்தினரும், பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வீட்டில் மயிலிறகை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. வாஸ்து டிப்ஸ்!
வீட்டில் மயிலிறகை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்.. வாஸ்து டிப்ஸ்!...
ஒரு நாளைக்கு ரூ.5,000 - யுபிஐ சர்க்கிளில் வந்த முக்கிய மாற்றம்!
ஒரு நாளைக்கு ரூ.5,000 - யுபிஐ சர்க்கிளில் வந்த முக்கிய மாற்றம்!...
உயர்த்தப்பட்ட ATM சேவை கட்டணங்கள் - அமலுக்கு வந்தது!
உயர்த்தப்பட்ட ATM சேவை கட்டணங்கள் - அமலுக்கு வந்தது!...
எல்லாம் நல்ல காலம் தான்.. ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
எல்லாம் நல்ல காலம் தான்.. ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!...
அஜித்தின் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து சொன்ன ஷாலினி
அஜித்தின் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து சொன்ன ஷாலினி...
பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு!
பெரூமூச்சு விட்ட பாகிஸ்தான் மக்கள்.. அட்டாரி வாகா எல்லை திறப்பு!...
ரூ.1.67 கோடி பாக்கி... கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்
ரூ.1.67 கோடி பாக்கி... கூலித் தொழிலாளிக்கு பறந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்...
பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி கோயில் தெரியுமா?
பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி கோயில் தெரியுமா?...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் - விமர்சனம் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கொண்டாடும் மக்கள் - விமர்சனம் இதோ...
ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்!
ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்!...
மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?
மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீலாவண்ய கௌரி விரதம்.. எப்படி இருப்பது?...