இலங்கையில் ரசிகர் செய்த செயல்… ஷாக்கான சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் ட்வீட்

Music Director Santhosh Narayanan: கோலிவுட் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ரெட்ரோ படத்திற்கு இசையமைத்துள்ளார். படல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

இலங்கையில் ரசிகர் செய்த செயல்... ஷாக்கான சந்தோஷ் நாராயணன் - வைரலாகும் ட்வீட்

சந்தோஷ் நாராயணன்

Published: 

15 May 2025 11:12 AM

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் அட்டகத்தி. இந்தப் படத்தில் நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருந்தார். இதன் பிறகே அவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று அழைக்க ஆரம்பித்தனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) கோலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவரது இசையில் வெளியான அனைத்தும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே, இறுதிச் சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, கொடி, காஷ்மோரா, பைரவா, காலா, பரியேறும் பெருமாள், வட சென்னை, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, மகான், குலு குலு, சித்தா என தொடர்ந்து இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இவரது இசையில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக ரெட்ரோ படத்தில் இருந்து கண்ணாடிப் பூவே மற்றும், கனிமா ஆகிய பாடல்கள் படு வைரலானது. இதில் கனிமா பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்தில் நடம் ஆடியது ரசிகர்களிடையே மேலும் வரவேற்பைப் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

சந்தோஷ் நாராயணன் எக்ஸ் தள பதிவு:

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, நேற்று (மே மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு) கொழும்பில் நான் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளஞர் பதட்டமாக என்னிடம் ஓடி வந்து அவசரமாக தனது போனை எடுத்து… ‘உதித் நாராயண் சார்’ என்றார், உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – உங்களை மாதிரியான ஒரு பாடகரைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார் என்று மிகவும் காமெடியாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!