Mrunal Thakur: அதன் தாக்கம்.. கனத்த இதயத்துடன் பல படங்களை நிராகரித்தேன் – மிருணாள் தாக்கூர்!

Mrunal Thakur Rejects Roles: தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து, தென்னிந்திய மக்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர். இவர் சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில், நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை நிராகரித்ததாகவும், அதன் காரணம் என்ன என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார்.

Mrunal Thakur: அதன் தாக்கம்.. கனத்த இதயத்துடன் பல படங்களை நிராகரித்தேன் - மிருணாள் தாக்கூர்!

மிருணாள் தாக்கூர்

Updated On: 

05 Apr 2026 12:20 PM

 IST

நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur) தமிழில் படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழ் மக்களின் மனதில் மிகவும் நெருக்கமானவர். இவர் ஆரம்பத்தில் இந்தியில் சின்னத்திரை சீரியல்களில் நடித்துவந்த நிலையில், அதன் தமிழ் மொழிபெயர்ப்பாக இனிய இருமலர்கள் (Iniya Iru Malargal) சீரியல் தமிழிலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் இருந்தனர். இந்த சீரியலை அடுத்ததாக இந்தி சினிமாவில் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியிருந்தார். அதில் தெலுங்கில் இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் சீதா ராமம் (Sita Ramam). இந்த படத்தில் சீதா மகாலெட்சுமியாக நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். இதையடுத்து நானிக்கு (Nani) ஜோடியாக, ஹாய் நன்னா (Hi Nana) என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படங்கள் இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்தது.

அந்த வகையில் இவரின் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி படமாக தயாராகியுள்ள படம் டக்கோய்ட். இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், மிருணாள் தாக்கூர் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர், தான் பல படங்களை நிராகரித்ததாகவும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ட்ரெய்லர்!

தொடர்ந்து அந்த மாதிரியான படங்களை நிராகரித்ததற்கு காரணம் பற்றி மிருணாள் தாக்கூர்:

அந்த நேர்காணலில் மிருணாள் தாக்கூர் பேசுகையில், “பல இயக்குநர்கள் என்னை நாடி, அந்த மாதிரியான கதைகளை கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்கள் எல்லாமே நன்றாகவே இருக்கும். ஆனால் நான் எனது கனத்த இதயத்துடன் அந்த படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், நான் சீதா மகாலெட்சுமி (சீதா ராமம்) கதாபாத்திரம் மற்றும் யஷ்னா (ஹாய் நன்னா) போன்ற கதாபாத்திரங்களின் தாக்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என நினைக்கிறேன்.

இதையும் படிங்க: நா ஒத்த விரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்… ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்!

அதனால் எனது கனத்த இதயத்துடன், அதுபோன்ற கதாபாத்திரங்களை கொண்டுவந்த இயக்குநர்களிடம், மரியாதையுடன் நான் ஒரு நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன் என சொல்லியிருக்கேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகை மிருணாள் தாக்கூரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை மிருணாள் தாக்கூர் தமிழில் நடிக்காவிட்டாலும், தமிழில் அழகாக பேசுவார். இவர் தனுஷுடன் படங்களில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது வந்தது. அதுபோல சிலம்பரசன் நடிப்பில் உருவாக்கவுள்ள STR51 படத்தில் இவர் முக்கிய நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கிட்டத்தட்ட 3 நடிகைகள் நடிக்கும் நிலையில், அதில் ஒருவராக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்