Varanasi: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Varanasi Movie Release Date Update: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் மகேஷ் பாபு. இவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வாரணாசி என்ற படத்தில் இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது எப்போது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Varanasi: மகேஷ் பாபு - ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

வாரணாசி திரைப்படம்

Published: 

29 Jan 2026 17:37 PM

 IST

டோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகனாக இருந்துவருபவர் மகேஷ் பாபு (Mahesh Babu). இவருக்கு தெலுங்கு சினிமாவில் பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக “குண்டூர் காரம் (Guntur Kaaram) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படமானது கடந்த 2024ல் வெளியான நிலையில், இப்படத்தை அடுத்ததாக கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக வாரணாசி (Varanasi) என்ற படத்திற்காக தயாராகிவருகிறார். இந்த படத்தை இந்திய பிரபல இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S. Rajamouli) இயக்க, மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) உள்ளிட்ட பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த படத்தின் திட்டில் ரிலீஸ் நிகழ்ச்சியே ஒரு பெரிய இசை வெளியிட்டு விழா அளவிற்கு நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியானது கடந்த 2025ம் ஆண்டில் நடந்த நிலையில், சாதனை படைத்திருந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர்கள் வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் படத்தின் பெயர் குறிப்பிடாமல் வைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ் என்பதுபோல காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் சங்கரின் வேள்பாரி படம் குறித்து வைரலாகும் முக்கிய அப்டேட்!

வாரணாசி பட ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இந்த வாரணாசி படமானது முற்றிலும் பான் இந்திய திரைப்படமாக தயாராகிவருகிறது. இந்த படமானது ஹாலிவுட் பட தரத்தில் தயாராகிவருவதாக கூறப்படும் நிலையில், இது ஒரு அறிவியல் புனைக் கதைகளை கொண்ட திரைப்படமாக தயாராகிவருகிறதாம். இந்த படத்தில் மகேஷ் பாபு ரெட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துவருவதாக கூறப்படுகிறது. மேலும் இ-படத்தில் மலையாள நடிகை பிரிதிவிராஜ் சுகுமாரன், “ரண கும்பா” என்ற வில்லன் வேடத்தில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

மேலும் பாகுபலி படத்தை போலவே இப்படத்திற்கும் இசையமைப்பாளர் எம். எம்.கீரவாணி இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பிலிருந்து, வாரணாசி படத்தின் முதல் பாடலான “குளோப் டிராட்டர்” கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே வெளியாகியிருந்தது. இதை ஸ்ருதி ஹாசன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இப்படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியில் வெளியாகவும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவரும் நிலையில், படக்குழு இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..